For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளிக்குமா ஸ்காட்லாந்து? நாளை மோதல்

By Veera Kumar

வெலிங்டன்: உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள நியூசிலாந்தும், குட்டி நாடான ஸ்காட்லாந்தும்

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோத உள்ளன. மே.இ.தீவுகளுக்கு அயர்லாந்து அளித்த அதிர்ச்சி தோல்வியை போல ஸ்காட்லாந்தும் ஏதாவது சாதனை செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து தனது முதல் போட்டியில் இலங்கையை 98 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்நிலையில் குட்டி நாடான ஸ்காட்லாந்தை நாளை எதிர்கொள்கிறது. செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு நியூசிலாந்தின் டுனேடின் மைதானத்தில் போட்டி தொடங்க உள்ளது.

நியூசியை வீழ்த்த நெருங்கிய ஸ்காட்லாந்து

நியூசியை வீழ்த்த நெருங்கிய ஸ்காட்லாந்து

கடந்த ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதியபோது, ஒரு ரன் வித்தியாசத்தில்தான் நியூசிலாந்து வெற்றி பெற முடிந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்து அதிருஷ்டவசமாக தப்பியது நியூசிலாந்து. எனவே உலக கோப்பையிலும் ஸ்காட்லாந்து விஸ்வரூபம் எடுத்தால் என்ன செய்வது என்ற பயம் நியூசிலாந்து கேம்ப்பில் உள்ளது.

வீடியோவ பார்த்து வெறியேற்றியுள்ளோம்

வீடியோவ பார்த்து வெறியேற்றியுள்ளோம்

ஸ்காட்லாந்து அணி தலைவர் பிரெஸ்டன் மோம்சன் நிருபர்களிடம் கூறுகையில், "நியூசிலாந்துக்கு எதிரான அந்த சமீபத்திய போட்டியின் வீடியோவை அணி வீரர்கள் அனைவரும் இன்று பார்த்தோம். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனதால் அந்த போட்டியில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தோம். கடந்த போட்டியில் ஆடிய பெரும்பாலான வீரர்கள் உலக கோப்பை அணியிலும் உள்ளோம். எனவே இம்முறை நியூசிலாந்தை வீழ்த்துவோம்" என்றார்.

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி விவரம்

பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரி ஆன்டர்சன், டிரென்ட் பவுல்ட், கிரான்ட் எல்லியட், மார்டின் குப்தில், டாம் லதாம், மிட்சல் மெக்லென்கன், நேத்தன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆதம் மில்னே, லூக் ரோன்சி, டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், டேனியல் வெட்டோரி, கனே வில்லியம்சன்.

ஸ்காட்லாந்து அணி விவரம்:

ஸ்காட்லாந்து அணி விவரம்:

பிரஸ்டோன் (கேப்டன்), ரிச்சே பெர்ரிங்டன், கைல் கோட்சர், பிரெட்டி கோல்மேன், மாத்யூ கிராஸ், ஜோஸ் டாவே, அலஸ்டயர் இவன்ஸ், ஹேமிஸ் கார்டினர், மஜித் ஹக், மைக்கேல் லீஸ்க், மாட் மசான், கலம் மெக்லியோட், சப்யான் ஷரிப், ரோப் டெய்லர், இயான் வார்ட்லா.

Story first published: Monday, February 16, 2015, 16:28 [IST]
Other articles published on Feb 16, 2015
English summary
One of the World Cup contenders will be up against potential giant-slayers when New Zealand take on Scotland in what promises to be a precarious outing for the co-hosts at Dunedin on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X