For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மச்சி, முடிஞ்சா ஆடிப் பாரு சாம்பியன் டான்ஸ்.. டோணி, ஹர்பஜனுக்கு சவால் விடும் பிராவோ

டெல்லி: கங்னாம் டான்ஸ் எல்லாம் பழைய மேட்டர் பாஸ்.. இப்ப சாம்பியன் டான்ஸ்தான் புது மேட்டர்.. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கு இந்திய அணித் தீவுகள் அணியினர் தாங்கள் ஆடி வெல்லும் ஒவ்வொரு போட்டியின் நிறைவிலும் இந்த டான்ஸைத்தான் போட்டுக் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். பிராவோ அறிமுகப்படுத்திய டான்ஸ் இது. இப்போது கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜனுக்கு விட்டுள்ளார் பிராவோ.

ரெண்டு பேரும் இந்த டான்ஸை ஆட முடியுமா என்று கேட்டுள்ளார் பிராவோ. அதாவது இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அதையொட்டி இந்த ஜாலியான சவாலை விடுத்துள்ளார் பிராவோ.

மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நாளை இப்போட்டி நடைபெறுகிறது. இதில் மோத இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.

நக்கலடித்த ஆப்கானிஸ்தான்

நக்கலடித்த ஆப்கானிஸ்தான்

சில தினங்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தானிடம் தேவையில்லாமல் அடி வாங்கியது மேற்கு இந்தியத் தீவுகள். இதையடுத்து போட்டி முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்களைப் போல சாம்பியன் டான்ஸ் ஆடி கலாய்த்தனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.

நீங்க ஆட ரெடியா

நீங்க ஆட ரெடியா

இந்த நிலையில்தான் நீங்களும் சாம்பியன் டான்ஸ் ஆட தயாரா, உங்களால் முடியுமா என்று கேட்டுள்ளார் வேயன் பிராவோ. இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.

டோணி - ஹர்பஜன்

இதுகுறித்து பிராவோ கூறுகையில், நான் சவால் விடுகிறேன்.. டோணி, ஹர்பஜன் சிங் இருவரும் சாம்பின் டான்ஸ் ஆடத் தயாரா, முடியுமா என்று கேட்டுள்ளார் பிராவோ.

டோணி மகளுடன்

இன்னொரு டிவிட்டில் டோணி, அவரது மகள், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் போஸ் கொடுத்து அதைப் போட்டுள்ளார் பிராவோ.

சென்னை டா.. சென்னை டா!

சென்னை டா.. சென்னை டா!

டோணியைக் கேப்டனாக கொண்டு செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் வீரராக வலம் வந்தவர் பிராவோ என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, March 30, 2016, 15:24 [IST]
Other articles published on Mar 30, 2016
English summary
As West Indies are all set to lock horns with Team India in the semi-finals of the ICC World Twenty20 tournament at Mumbai's Wankhede Stadium on Thursday, Dwayne Bravo has challenged India's limited-overs skipper Mahendra Singh Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X