For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேர்ல்டு கப் பைனல்… வாழ்க்கையின் மோசமான நாள்..! செத்தாலும் அதை மறக்கவே முடியாது

Recommended Video

உலக கோப்பை பைனல்.. அந்த நாளை மட்டும் மறக்கமாட்டேன் - மார்ட்டின் குப்தில்- வீடியோ

ஆக்லாந்து: எனது வாழ்வின் மோசமான நாள் என்றால், அது உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் என்று நியூசி. வீரர் மார்ட்டின் குப்தில் கூறியுள்ளார்.

உலக கோப்பை முடிந்தாலும், அது தொடர்பான பேச்சுகள் இன்னும் முடிய வில்லை. இங்கிலாந்து, நியூசிலாந்து அணி வீரர்கள் அது பற்றி பேசி பேசியே ஓய்ந்து போகின்றனர். இவர் இப்படி ஆடி இருக்கலாம், போட்டியின் முடிவு இப்படி ஆகி விட்டதே என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக கருத்து கூறி இருப்பவர் மார்ட்டின் குப்தில். 2 இன்னிங்ஸ்களும் டை ஆக, சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. அப்போது ரன் அவுட்டாகி அணிக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகுக்கும் அதிர்ச்சி அளித்தவர் மார்ட்டின் குப்தில்.

சமன், சாம்பியன்

சமன், சாம்பியன்

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்ததால், இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது நியூசிலாந்து வீரர்களுக்கு பெருத்த மனவேதனையை ஏற்படுத்தியது.

வாழ்வின் மோசமான நாள்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறி இருப்பதாவது: உலக கோப்பை இறுதி போட்டி நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சிறந்த மோசமான நாள் அது தான். எனினும் நியூசிலாந்தில் இடம் பெற்று ஆடியதை, பெரிய கவுரவமாக நான் பார்க்கிறேன்.

அனைவருக்கும் நன்றி

எனது விளையாட்டை ஊக்கப்படுத்தி, பல தருணங்களில் தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. பல வித்தியாசமான உணர்ச்சிகள், முக்கியமாக நியூசிலாந்தை பிரதிநிதிப் படுத்துவதற்கும், பெரிய குழுவினருடன் விளையாடியதையும் நினைத்து பெருமிதமாக உள்ளது.

விரும்புவது இதுதான்

விரும்புவது இதுதான்

எனது நல்ல தருணம் மற்றும் மோசமான நாள் இரண்டிலும், ஆதரவு தரும் இருவர் என்னோடு வருவார்கள். எனது மகளையும், மனைவியையும், உலகில் வேறு எந்த விஷயத்தையும் விட அதிகம் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத ஒன்று

மறக்க முடியாத ஒன்று

2015ம் ஆண்டு உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த குப்தில், 2019 உலக கோப்பை தொடரில் சாதிக்க வில்லை. ஆனால், அவரது சிறப்பான பீல்டிங் பெரிதாக பேசப்பட்டது. அரையிறுதி போட்டியில் தோனியை ரன் அவுட் செய்ததால், இந்தியா தோல்வியை தழுவியதை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

Story first published: Wednesday, July 24, 2019, 15:02 [IST]
Other articles published on Jul 24, 2019
English summary
Worst day in my life says Newzealand player Martin Guptill.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X