For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் கேப்டனாகி இருக்கணும்.. ஆனா தோனி கேப்டன் ஆனார்.. அது மட்டுமில்லை.. யுவி தந்தை சரமாரி விளாசல்!

மும்பை : யுவராஜ் சிங் தான் கேப்டனாகி இருக்க வேண்டும், ஆனால், தோனிக்கு கேப்டன் பதவி கிடைத்தது என யுவராஜின் தந்தை மீண்டும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

Recommended Video

Yograj slams Dhoni that Yuvraj Was Supposed To Become Captain

யுவராஜ் சிங் சில ஆண்டுகள் இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் திணறினார். அதற்கு அவர் பார்மும் ஒரு காரணம்.

எனினும், அவரின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து தோனி, விராட் கோலி, தேர்வுக் குழு போன்றரை தாக்கி கருத்துக்கள் கூறி வருகிறார்.

இது யாருன்னு தெரியுதா? முதல் போட்டியிலேயே செஞ்சுரி அடித்து கெத்து காட்டிய நம்ம கேப்டன்!இது யாருன்னு தெரியுதா? முதல் போட்டியிலேயே செஞ்சுரி அடித்து கெத்து காட்டிய நம்ம கேப்டன்!

கங்குலியின் சிறந்த அணி

கங்குலியின் சிறந்த அணி

இந்த முறை அவர் யுவராஜ் சிங்குக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி தோனிக்கு போனதோடு, கங்குலி உருவாக்கிய சிறந்த அணியும் கிடைத்தது என கூறி விமர்சனம் செய்துள்ளார். நல்ல அணி இருந்ததாலேயே தோனி கேப்டன்சியில் வெற்றிகள் குவித்ததாக குத்திக் காட்டி பேசி உள்ளார் அவர்.

கங்குலி கேப்டன்சி

கங்குலி கேப்டன்சி

கங்குலி 2000த்தின் துவக்கத்தில் இந்திய அணியின் கேப்டனாக பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தார். அப்போது குறைந்த உள்ளூர் போட்டி அனுபவம் கொண்ட, திறமையான பல இளம் வீரர்களை நேரடியாக இந்திய அணியில் சேர்த்தார்.

பல இளம் வீரர்கள்

பல இளம் வீரர்கள்

யுவராஜ் சிங், முகமது கைஃப், ஜாகிர் கான், வீரேந்தர் சேவாக் என பல இளம் வீரர்கள் பின் முன்னணி வீரர்களாக மாறி பல போட்டிகளை, பெரிய தொடர்களை வென்று கொடுத்தனர். அந்த வரிசையில் கடைசியாக கங்குலி சேர்த்த முக்கிய வீரர் என தோனியை கூறலாம்.

தோனியின் வளர்ச்சி

தோனியின் வளர்ச்சி

ஆனால், இந்திய அணியில் தோனியின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. அறிமுகம் ஆகி மிகச் சில தொடர்களிலேயே அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறினார். 2007இல் டி20 அணிக்கு கேப்டனாக மாறி, பின் ஒருநாள் அணிக்கும் கேப்டன் ஆனார்.

தோனி அதை செய்யவில்லை

தோனி அதை செய்யவில்லை

இந்த நிலையில், கங்குலி எப்படி இளம் வீரர்களை ஊக்குவித்து அணியை உருவாக்கினாரோ அது போல தோனி செய்யவில்லை என்றும், அவருக்கு நல்ல சிறப்பான கட்டமைப்பை கொண்ட அணி கிடைத்ததாகவும் கூறி விமர்சித்துள்ளார் யோக்ராஜ் சிங்.

தோனியை பற்றி பேசுகிறார்கள்

தோனியை பற்றி பேசுகிறார்கள்

யோக்ராஜ் சிங் கூறுகையில், "நான் சேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் பேசிய வீடியோக்கள் சிலவற்றை பார்த்தேன். அவர்கள் அனைவரும் தோனி பற்றி சில விஷயங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறி உள்ளனர்" என மற்ற வீரர்களுக்கு தோனி மீது இருக்கும் அதிருப்தியை சுட்டிக் காட்டினார்.

கங்குலிக்கு பாராட்டு

கங்குலிக்கு பாராட்டு

மேலும், "ஏன் எல்லோரும் கங்குலி பற்றி அதிக அளவில் பாராட்டி பேசுகிறோம்? அவர் அணியை உருவாக்க ஆரம்பித்த போது, தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தது. அவர் யுவராஜ், கைஃப், ஹர்பஜன், சேவாக், கம்பீர் என இளம் வீரர்களைக் கொண்டு புதிய அணியை உருவாக்கினார்" என்றார்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

அடுத்து கேப்டன் பதவி பற்றி பேசினார். "யுவராஜ் சிங் கேப்டன் ஆகி இருக்க வேண்டும். ஆனால், தோனி கேப்டன் ஆனார். அத்துடன் நல்ல கட்டமைக்கப்பட்ட அணியும் அவருக்கு கிடைத்தது. இது விதி." என தோனியை கடுமையாக விமர்சனம் செய்தார் யோக்ராஜ் சிங்.

யுவராஜ் முதுகில் குத்தினார்கள்

யுவராஜ் முதுகில் குத்தினார்கள்

மேலும், தோனி, விராட் கோலி மட்டுமில்லாமல், தேர்வுக் குழுவினரும் யுவராஜ் சிங் முதுகில் குத்தி விட்டார்கள் எனவும் அவர் கூறி உள்ளார். யுவராஜ் சிங்கை பிசிசிஐ முறையாக வழியனுப்பவில்லை எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் யோக்ராஜ் சிங்.

Story first published: Thursday, May 7, 2020, 21:00 [IST]
Other articles published on May 7, 2020
English summary
Yuvraj Singh father says Dhoni got captaincy as well as well built team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X