For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தையே மாற்றி விட்டார்..எங்கள் திட்டத்தை சூர்யகுமார் உடைத்துவிட்டார்..ஜிம்பாப்வே கேப்டன் கருத்து

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ், 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அசத்தினார்.

இதன் மூலம் ஒரு கட்டத்தில் தடுமாறிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

நடப்பாண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சூரியகுமார் யாதவ் பெற்றார்.

டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல்: அரையிறுதியில் யார்? யார்? மோதல்.. போட்டிகள் எப்போது? டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல்: அரையிறுதியில் யார்? யார்? மோதல்.. போட்டிகள் எப்போது?

பாராட்டு

பாராட்டு

சூரியகுமார் யாதவ் , ஜிம்பாப்வே வீரர்கள் வீசிய யாக்கர் லென்த் பந்தை கூட அபாரமாக சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரை மீண்டும் இன்று நிலை நிறுத்தினார் சூரியகுமார் யாதவ். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், சூரியக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

எங்களுடைய திட்டத்தை நாங்கள் மாற்றி இருக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். ரீச்சி வீசிய ஓயிடு யாக்கர்களை சூரியகுமார் யாதவ் ஆடிய விதம் அபாரமாக இருந்தது. நாங்கள் பந்தின் வேகத்தை குறைத்து வீசியிருக்க வேண்டும். எனினும் அனைத்து சிறப்புகளும் சூரிய குமாருக்கே சேரும்.

தலைகீழ் மாற்றி விட்டார்

தலைகீழ் மாற்றி விட்டார்

களத்திற்கு வந்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றி விட்டார். இந்தத் தொடரில் நாங்கள் களம் இறங்கும் போது எங்களுடைய பேட்டிங்கில் சில நல்ல விஷயங்கள் இருந்தது. இந்தத் தொடரில் பெரும்பாலும் நாங்கள் அச்சமின்றி விளையாடினும், கடைசி இரண்டு ஆட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தோம் என நினைக்கிறேன். பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் ஏனோ தானோ என்று விளையாட முடியாது.

கடுமையாக போராடினோம்

கடுமையாக போராடினோம்

அப்படி செய்தால் பேட்டிங்கில் ஆட்டம் இழக்க நேரிடும். நீங்கள் யோசித்து ஷாட்களை தேர்வு செய்து விளையாட வேண்டும். நாங்கள் திட்டமிட்டபடி கடைசி இரண்டு போட்டிகளில் முடிவு எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் சூப்பர் 12 சுற்றில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன். அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அணியை மேலும் கட்டமைக்க வேண்டும். எங்களுடைய ஃபில்டிங் சிறப்பாக அமைந்தது. வீரர்கள் கேட்ச்களை எல்லாம் சிறப்பாக பிடித்தனர். உலகக் கோப்பையில் எங்கள் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள் என்று அவர் கூறினார்.

Story first published: Sunday, November 6, 2022, 19:42 [IST]
Other articles published on Nov 6, 2022
English summary
Zimbabwe captain craig ervine lauds suryakumar yadav batting changed the game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X