டோணிக்கு கிடைத்த பத்மபூஷண்.. கொண்டாடிய சென்னை மச்சான்ஸ்!

Posted By: Staff

கோல்கட்டா: கேப்டன் கூல் டோணிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை, அவருடைய சென்னையின் எப்சி அணி, ஏடிகே அணிக்கு எதிராக வெற்றி பெற்று கொண்டாடினர்.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, நேற்று நடந்த ஆட்டத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த ஏடிகே அணியுடன் மோதியது.

Chennaiyin FC celebrates

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் கோலடித்து ஏடிகே முன்னிலை பெற்றது. அந்த அணி தடுப்பாட்டத்தில் சரியாக செயல்படாததை கேப்டன் கூல் டோணியின் சென்னையின் எப்சி அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.

ஆட்டத்தின் 51 மற்றும் 64வது நிமிடங்களில் சூப்பர் மச்சான்ஸ் அணி கோலடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 12 போட்டிகளில் 7 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகளுடன், 23 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அடுத்ததாக பிப்., 6ல் நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியுடன் மோதுகிறது.

Story first published: Friday, January 26, 2018, 15:05 [IST]
Other articles published on Jan 26, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற