டாப்பில் பெங்களூரு எப்சி…. சென்னையின் எப்சியை டக்கராக வென்றது

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சென்னை:10 கி.மீ., தூர மாரத்தானில் 9 கி.மீ., வரை ஓடிவிட்டு, இனிமேல் முடியாது என்று துவங்கிய இடத்துக்கே ஒருவர் திரும்பி ஓடிவந்தால் எப்படி இருக்கும். அதுதான், பெங்களூரு எப்சிக்கு எதிராக சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி செய்தது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு எப்சி அணியுடன், முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மோதியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், முதலிடத்தைப் பிடிப்பதுடன், அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு சென்னையின் எப்சிக்கு அதிகம் இருந்திருக்கும்.

ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் பெங்களூரு எப்சியை 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி வென்றிருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2வது நிமிடத்திலேயே கோல்

2வது நிமிடத்திலேயே கோல்

ஆனால், பெங்களூரு எப்சி 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே போய்தாங்க் ஹோகிப் கோலடித்து சென்னையின் எப்சியை வெறுப்பேத்தினார். 33வது நிமிடத்தில் பிரான்சிஸ் பெர்னான்டஸ் கோலடித்து, சென்னையின் எப்சிக்கு சமநிலையை உருவாக்கினார்.

வேகமெடுத்த ஆட்டம்

வேகமெடுத்த ஆட்டம்

மிகவும் பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், மிகு 63வது நிமிடத்தில் கோலடிக்க, பெங்களூரு எப்சி 2-1 என்று முன்னிலை பெற்றது. சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு ஆட்டம் அதன்பிறகு வேகமெடுத்தது.

வாய்ப்பு போச்சு

வாய்ப்பு போச்சு

சென்னையின் எப்சிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், வட போச்சே கணக்காக அமைந்தது. ஜிஜோ லால்பெக்குலா அடித்த பந்தை பெங்களூரு கோல் கீப்பர் தடுத்து நிறுத்த, டிரா செய்யும் வாய்ப்பை சென்னையின் எப்சி இழந்தது.

10 பேருடன் விளையாடியது

10 பேருடன் விளையாடியது

எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல், 71வது நிமிடத்தில் ஹென்றிக் செரினோவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 பேருடன் விளையாட நேர்ந்ததுடன், கூடுதல் நேரமும் கிடைத்தது.

சேத்ரிக்கு 9வது கோல்

சேத்ரிக்கு 9வது கோல்

மிகச் சிறந்த பினிஷரான கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் அணியான சென்னையின் எப்சி கடைசி நேரத்தில் எப்படி பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் சுனில் சேத்ரி, இந்த சீசனில் 9வது கோலை அடிக்க, பெங்களூரு 3-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.

7 புள்ளிகள் வித்தியாசம்

7 புள்ளிகள் வித்தியாசம்

பெங்களூரு எப்சி 14 போட்டிகளில் 10 வெற்றிகள், 4 தோல்வியுடன் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது. சென்னையின் எப்சி 13 போட்டிகளில் 7 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளுடன், 23 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வரும் 11ம் தேதி டெல்லி டைனமோஸ் அணியுடன் சென்னையின் எப்சி மோத உள்ளது.

English summary
Bengaluru FC retains top position by defeating Chennaiyin FC
Story first published: Wednesday, February 7, 2018, 11:09 [IST]
Other articles published on Feb 7, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற