வெற்றிக்கு திணறும் சூப்பர் மச்சான்ஸ்!

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: ரூ.10 மதிப்புள்ள ஒரு பொருளை, ரூ.90க்கு வாங்கி, அதற்காக ரூ.100 கொடுத்து, ரூ10 சில்லரை கிடைக்கும்போது, அப்பாடா நமக்கு பாக்கி சில்லரை கிடைத்தது என்று நீங்கள் சந்தோஷப்பட்டிருக்கிறீர்களா?

அப்படியானால், ஐஎஸ்எல் லீக் பிரிவு ஆட்டத்தில், டெல்லி டைனமோஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி நேரத்தில் தோல்வியில் இருந்து தப்பிய சென்னையின் எப்சியின் மனநிலையோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்கள்.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த தனது 14வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணியுடன் சென்னையின் எப்சி மோதியது.

கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பினிஷராகக் கருதப்படும் தல டோணியின் அணியின் சென்னையின் எப்சி, முக்கியமான ஆட்டங்களில் சொதப்பி வருகிறது. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் டிரா செய்து சமாதானம் அடைந்து வருகிறது.

சூப்பர் மச்சான்களுக்கு என்ன ஆச்சு

சூப்பர் மச்சான்களுக்கு என்ன ஆச்சு

முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி அணி, ஒரு கட்டத்தில் இந்தாண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் மச்சான்ஸ் அணி, சற்று சொதப்பி வருகிறது.

புள்ளிப் பட்டியலில் பின்தங்கியது

புள்ளிப் பட்டியலில் பின்தங்கியது

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மாறி மாறி இருந்து வந்த அணி தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

கோலடித்தது டெல்லி

கோலடித்தது டெல்லி

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில், 59வது நிமிடத்தில் காலு உச்சே கோலடிக்க, டில்லி டைனமோஸ் 1-0 என முன்னிலை பெற்றது. சார் ரஜினியும் கமலுக்கும் உண்மையில் அரசியலுக்கு வந்துவிட்டார்களா என்ற கேள்விக்கு, கமல் பாணியில் தெரியலேப்பா என்று பதில் சொல்வது போல், இந்தப் போட்டியில் சென்னையின் எப்சி தேறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஒரு புள்ளி மட்டும் கிடைத்தது

ஒரு புள்ளி மட்டும் கிடைத்தது

ஆனால் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கியது சென்னையின் எப்சி. வென்றால் மூன்று புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டிய ஆட்டத்தில், கடைசியில் டிரா செய்து ஒரு புள்ளியை மட்டும் சென்னையின் எப்சி பெற்றது.

கடைசியில் உள்ள அணியுடன் டிரா

கடைசியில் உள்ள அணியுடன் டிரா

ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு இந்தப் போட்டியின் முடிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் வென்றால், புள்ளிப் பட்டியலில் குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்க முடியும். மேலும் லீக் ஆட்டங்கள் இருந்தாலும், கடைசி இடத்தில் உள்ள அணியுடன் சென்னையின் எப்சி டிரா செய்தது, முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்.

முன்னாள் சாம்பியன்கள் மோதல்

முன்னாள் சாம்பியன்கள் மோதல்

தற்போதைய நிலையில் பெங்களூரு எப்சி 33 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. எங்கேயோ இருந்த புனே சிட்டி 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து. ஜாம்ஷெட்புர் எப்சி 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னையின் எப்சி 24 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. வரும் 15ம் தேதி இரண்டு முறை சாம்பியனான கோவா ஏடிகே அணியுடன் சென்னை மோத உள்ளது.

Story first published: Monday, February 12, 2018, 11:02 [IST]
Other articles published on Feb 12, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற