For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - 1966ஐ ரிப்பீட் செய்யுமா இங்கிலாந்து!

பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி குறித்த விரிவான அலசல்.

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

England are Fresh and hungry in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

நாடு: இங்கிலாந்து
ஜி பிரிவில் பெல்ஜியம், துனீஷியா மற்றும் பனாமாவுடன் இடம்பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள்:
ஜூன் 18ல் துனீஷியா
ஜூன் 24ல் பனாமா
ஜூன் 27ல் பெல்ஜியம்

பிபா தரவரிசை: 13

கடந்த உலகக் கோப்பையில்: பிரிவு சுற்றுடன் வெளியேறியது.

உலகக் கோப்பையில் சிறந்த இடம்: 1966ல் கோப்பையை வென்றது.

முக்கிய வீரர்கள்: ஹாரி கானே, ரஹீம் ஸ்டெர்லிங், கைல் வால்கர், டேல் அலி.

கோச்: ஜெராத் சவுத்கேட்
---
உலகக் கோப்பையை இதுவரை வென்றுள்ள 8 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியனானது.

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு சீசனிலும் மிகவும் வலுவான அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று அந்த அணி கூறப்படும். அதுபோலவே ஒவ்வொரு உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணி மீது இதுபோன்ற எதிர்பார்ப்பு ஏற்படும்.

இந்த முறை இங்கிலாந்து அணியில் பல இளம் வீரர்கள் உள்ளதால், அதுபோன்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. 1966க்குப் பிறகு மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் நடக்கும் பிரிவு சுற்று ஆட்டங்களில் கண்டிப்பாக வெல்லக் கூடியதாக இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து அணியின் கோச் சவுத்கேட் மிகத் திறமையாக திட்டமிடக் கூடியவர்.

லீக் சுற்றில் பனாமா மற்றும் பெல்ஜியம் சற்று சவாலாக இருக்கலாம். ஆனால் சவுத்கேட்டின் திட்டம் மற்றும் வெற்றி என்ற பசியுடன் இருக்கும் இளம் வீரர்களின் ஆட்டம் ஒன்றாக இணைந்தால், இரண்டாவது சுற்றுக்கு இங்கிலாந்து கண்டிப்பாக முன்னேறும்.

Story first published: Monday, June 4, 2018, 10:39 [IST]
Other articles published on Jun 4, 2018
English summary
Young england players are hungry to win the fifa world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X