கூல் டோணி மற்றும் விராட் கோஹ்லி இடையே மோதல்.. இது வேற பாஸ்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: என்ன தலைப்பைப் பார்த்ததும் ஷாக் ஆயிருச்சா.. இது வேற மோதல் பாஸ். தொடர்ந்து படிங்க.

கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் சென்னையின் எப்சி அணியும், விராட் கோஹ்லியின் எப்சி கோவா அணியும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மோதுகின்றன.

கிரிக்கெட்டில் ஐபிஎல் போல, கால்பந்துக்காக ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடக்கின்றன. நான்காவது சீசன் அரை இறுதியை எட்டியுள்ளது.

அபியும், டோணியும்

அபியும், டோணியும்

பெங்களூரு எப்சி, நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எப்சி புனே சிட்டி, கேப்டன் கூல் டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்சி அணிகள் அரை இறுதிக்கு ஏற்கனவே நுழைந்து விட்டன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில், கோஹ்லியின் எப்சி கோவா அணி, ஜாம்ஷெட்பூர் எப்சியை வென்று அரை இறுதிக்கு நுழைந்தது.

பெங்களூரு அணி டாப்

பெங்களூரு அணி டாப்

அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்த நிலையில், பெங்களூரு எப்சி 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னையின் எப்சி 32 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், எப்சி கோவா மற்றும் புனே சிட்டி அணிகள் தலா 30 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்தன.

பெங்களூரு – புனே இடையே அரை இறுதி

பெங்களூரு – புனே இடையே அரை இறுதி


அரை இறுதியில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு மற்றும் நான்காவது இடத்தில் உள்ள புனே சிட்டி அணிகள் மோத உள்ளன. இந்த அணிகள் 7 மற்றும் 11ம் தேதி நடக்கும் ஆட்டங்களில் விளையாட உள்ளன.

சென்னையும் கோவாவும் மோதுகின்றன

சென்னையும் கோவாவும் மோதுகின்றன

புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள கேப்டன் கூல் டோணியின் சென்னையின் எப்சி அணியும், மூன்றாவது இடத்தில் உள்ள கேப்டன் விராட் கோஹ்லியின் எப்சி கோவா அணியும் மற்றொரு அரை இறுதியில் விளையாட உள்ளன. இந்த அணிகள் 10 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கும் ஆட்டங்களில் விளையாட உள்ளன.

Story first published: Monday, March 5, 2018, 9:59 [IST]
Other articles published on Mar 5, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற