For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிஃபா உலககோப்பை இன்று தொடக்கம்.. கோலாகல கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு.. எந்த சேனலில் பார்ப்பது?

கத்தார் : 2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடர் இன்று கத்தாரில் தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் இம்முறை 32 அணிகள் பங்கேற்கிறது.

உலகத்திலேயே அதிக மக்களால் பார்க்கப்படும் தொடர் என்ற சாதனையை ஃபிஃபா உலக கோப்பை தொடர் பெற்று வருகிறது. எப்போதும் சுழன்று வரும் உலகம், இந்த நாளில் மட்டும் நின்று விடும்.

அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டு மீது அதிக பற்றை ரசிகர்கள் கொண்டுள்ளனர். இந்த தொடரை காண வெளிநாட்டிலிருந்து 10 லட்சம் ரசிகர்கள் கத்தாருக்கு வர உள்ளனர்.

கிரிக்கெட்டை விட கால்பந்து ஏன் கெத்து??.. உலகமே கொண்டாடுவது இதற்காக தானா?..மூன்று முக்கிய காரணங்கள் கிரிக்கெட்டை விட கால்பந்து ஏன் கெத்து??.. உலகமே கொண்டாடுவது இதற்காக தானா?..மூன்று முக்கிய காரணங்கள்

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த நிலையில், ஃபிஃபா உலககோப்பையின் தொடக்க நிகழ்ச்சி தோஹாவிலிருந்து 40 கி.மீ. அருகே உள்ள அல் பாயத் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு 60 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். முதல் லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடார் அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க விழா

தொடக்க விழா

முதல் போட்டிக்கு முன்பு கோலாகலமாக தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் உலக புகழ் பெற்ற BTS இசைக்குழு தங்களது இசையை நிகழ்ச்சியை நடத்துகின்றன. இதனால், ரசிகர்களிடையே, தொடக்க நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த குழு தங்களது புகழ் பெற்ற Dreamers பாடலை, நிகழ்ச்சியில் பாட உள்ளனர். மேலும் கத்தார் நாட்டு கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

எந்த சேனல்?

எந்த சேனல்?

இந்த தொடக்க விழா இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 என்ற சேனல் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதே போன்று ஓடிடியின் ஜியோ சினிமா என்ற ஆப்பில் இலவசமாக பார்க்கலாம். கால்பந்து போட்டியை பொறுத்தவரை இந்த அணி தான் வெல்லும் என்று நாம் கணிக்க முடியாது. அது தான் கால்பந்து போட்டியின் சுவாரஸ்யமே. ஆனால் இம்முறை களமிறங்கிய அணிகளில் பிரேசில் பலமாக காணப்படுகிறது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இதனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசில் அணி ஃபிஃபா உலககோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தங்களது கடைசி உலககோப்பையில் விளையாடுகிறார்கள்.இதனால் இம்முறையாவது கோப்பையை அவர்கள் வெல்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Story first published: Sunday, November 20, 2022, 9:56 [IST]
Other articles published on Nov 20, 2022
English summary
FIFA world cup 2022 kicks start today – opening ceremony live telecast details ஃபிஃபா உலககோப்பை இன்று தொடக்கம்.. கோலாகல கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு.. எந்த சேனலில் பார்ப்பது?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X