For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வரலாறு படைத்த மொராகோ அணி.. முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வெளியேறியது.. பாகுபலி போல் நின்ற கோல் கீப்பர்

தோஹா : 2022 ஃபிஃபா உலக கோப்பையில் மொராகோ அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தியது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 இல், மொராகோ அணி,யும், ஸ்பெயின் மோதியது. ஸ்பெயின் தனது, பிரபல விளையாட்டு முறையான டிக்கி டாக்கா என்ற ஸ்டைலை கடைப் பிடித்தது.

அதாவது, வழக்கம் போல் பந்தை அவர்களுக்குள் பாஸ் செய்து, பந்தை தங்களுக்குள் வைத்து கொண்டு எதிரணி வீரர்களை வெறுப்பேற்றுவது.

கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது?? கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது??

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் இந்த முறை வெறுப்பானது எதிரணி அல்ல, ரசிகர்கள் தான். இப்போயாவது கோல் போடுங்க ஐயா என்று வாய் விட்டு கதறும் அளவுக்கு அந்நாட்டு ரசிகர்களை ஸ்பெயின் வீரர்கள் வெறுப்பேற்றினர். அவர்களுக்குள் பந்தை கடத்தி கொண்டால் போதுமா, கோல் போட வேண்டும் அல்லவா. முதல் பாதியில் ஸ்பெயின் அணி கோல் போஸ்டை நோக்கி ஒரு முறை தான் அடித்தது.

56 ஆண்டுகள்

56 ஆண்டுகள்

அதாவது, ஒரு முறை க்கு மேல் கோல் அடிக்க முதல் பாதியில் முயற்சி செய்யாதது, 56 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உலககோப்பை தொடரில் ஸ்பெயின் அணியின் மோசமான செயல்பாடாகும். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் மாறி மாறி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை. குறிபபாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்திலும், கூடுதல் நிமிடத்திலும் தங்களுக்கு கிடைத்த அடுத்தடுத்த ஃபிரி கிக் வாய்ப்பை ஸ்பெயின் வீரர்கள் வீணடித்தனர்.

பாதுகாப்பு அரண்

பாதுகாப்பு அரண்

ஸ்பெயின் வீணடித்தது என்று சொல்வதை விட, பாதுகாப்பு அரணாக நின்ற மொராகோ கோல் கீப்பர் யாசின் தடுத்தார் என்று சொல்வதே சரியாகும். 120 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதனால், வெற்றியாளர்களை தீர்மானிக்கு பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி சூட் அவுட்

பெனால்டி சூட் அவுட்

இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் போட்ட கோலை யாசின் தடுத்தார், ஆனால் மொராகோ வீரர் அப்தேல் ஹமித் முதல் கோல் போட, 1க்கு0 என ஸ்கோர் ஆனது. இதே போன்று 2வது வாய்ப்பையும், ஸ்பெயின் வீணடிக்க, ஹக்கிம் மொராகோவுக்கு கோல் போட்டார். இதனால் 2க்கு0 என்று ஸ்கோர் மாறியது. .அப்போது ஸ்பெயின் தங்களுக்கு கிடைத்த 3வது வாய்ப்பை கோலாக மாற்ற,மொராகோ வீரர் பதர் 3வது கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார்.

ஸ்பெயின் தோல்வி

ஸ்பெயின் தோல்வி

3 வாய்ப்பின் முடிவில் 2க்கு 1 என்ற நிலையில் ஸ்கோர் இருந்தது. இதனையடுத்து, பரபரப்பான கட்டத்தில் 4வது வாய்ப்பை ஸ்பெயின் வீணடிக்க, மொராகோ அதனை கோலாக மாற்றியது. இதன் மூலம் 3க்கு1 என்ற பெனால்டி சூட் அவுட் முறையில் மொராகோ முதல் முறையாக காலிறுதிக்கு சென்றது. ஸ்பெயின் அணி, கடந்த 3 முக்கிய சர்வதேச தொடரிலும், பெனால்டி சூட் அவுட்டில் வந்து கோட்டை விட்டது. கடந்த உலககோப்பையிலும், யூரோ கோப்பையிலும் பெனால்டி சூட் அவுட்டில் வந்து ஸ்பெயின் தோற்றது. சிறப்பாக கோல்களை தடுத்த மொராகோ வீரர் யாசின் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

Story first published: Wednesday, December 7, 2022, 0:49 [IST]
Other articles published on Dec 7, 2022
English summary
FIFA world cup 2022 Morocco historic win against spain put them in quater finalவரலாறு படைத்த மொராகோ அணி.. முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வெளியேறியது.. பாகுபலி போல் நின்ற கோல் கீப்பர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X