ஃபிபா இறுதிப்போட்டி: ஒரு கண் கிரிக்கெட்.. ஒரு கண் ஃபுட்பால்.. மாஸ்கோவிற்கு பறந்த தாதா கங்குலி!

மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் கால்பந்து போட்டியை காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தாதா கங்குலி ரஷ்யா சென்றுள்ளார்.

விமானம் மூலம் அவர் இன்று மாலை மாஸ்கோ சென்றார்.தற்போது இந்த இறுதிப்போட்டி தொடங்கியுள்ளது.

இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஒரு மாதமாக நடந்த இந்த நீண்ட தொடரின் முடிவு இன்று தெரியவரும்.

வர்ணனை

இந்தியா இங்கிலாந்து மோதும் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் சார்பாக வர்ணனையாளராக கங்குலில் கலந்து கொண்டு இருக்கிறார். இதற்காக சென்ற மாதம் அவர் லண்டன் சென்றார்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

இந்த நிலையில் கால்பந்து இறுதிப்போட்டியை காண கங்குலி மாஸ்கோ சென்று இருக்கிறார்கள். கால்பந்து இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடக்கிறது. இதற்காக அவர் இந்த போட்டிக்கு சென்று இருக்கிறார்.

அனுமதி

இந்த கால்பந்து போட்டிக்கு உலகின் சில முக்கியமான நபர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு தனி இருக்கை உட்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கங்குலிக்கும் இந்த சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்வம் அதிகம்

ஆர்வம் அதிகம்

பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கால்பந்து மீது அலாதி பிரியம் இருக்கிறது. தொடக்கத்தில் கால்பந்து வீரராக இருந்து வளர்ந்தவர்தான் தோனி, அதேபோல் யுவராஜ் சிங்கும் கால்பந்து அலாதி பிரியம் கொண்டவர். சச்சினும் கேரளா கால்பந்து அணியின் உரிமையாளாராக இருக்கிறார். தற்போது கங்குலி கால்பந்து பொடியை காண மாஸ்கோ வரை சென்றுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
FIFA WORLD CUP FINAL: Ganguly goes to Moscow to London to see the match.
Story first published: Sunday, July 15, 2018, 20:51 [IST]
Other articles published on Jul 15, 2018
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X