
மெஸ்ஸிக்கு கொரோனா
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை பி.எஸ்.ஜி. அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மெஸ்ஸி உள்ளிட்ட 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பரிசோதனை முடிவு வந்துள்ளது. இதனையடுத்து 4 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

உச்சத்தில் கொரோனா
மெஸ்ஸிக்கு கொரோனாவுக்கான அறிக்குறிகள் ஏதும் இல்லை என்றும், தற்போது தனிமையில் உள்ளதாகவும் பி.எஸ்.ஜி. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தாலும் தற்போது பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பி.எஸ்.ஜி. அணிக்கு பின்னடைவு
இதே போன்று பி.எஸ்.ஜி. அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான நேமார் தற்போது காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் ஒரு மாதத்திற்கு பிறகு தான் அணிக்கு திரும்புவார். தற்போது மெஸ்ஸிக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளதால் அந்த அணி நாளை களமிறங்கும் போட்டியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ரசிகர்கள் கவலை
கடந்த மாதம் தான் மெஸ்ஸி, சிறந்த கால்பந்து வீரருக்கான தங்க கால்பந்து கோப்பை 7 முறை வென்று சாதனை படைத்தார். இந்த ஆண்டு இறுதியில் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் மெஸ்ஸிக்கு இது முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. ஆனால் ஆண்டின் தொடக்கத்திலேயே மெஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.