பைனலில் பட்டையைக் கிளப்ப வேண்டியதான்.. கோல் மழை காத்திருக்கு.. ஐஎஸ்எல் இறுதியில் டபுள் இரட்டையர்கள்!

கோவா : தங்களுடைய மூன்றாவ‌து ஐஎஸ்எல் மகுடத்தை வெல்லும் கனவிலிருக்கும் ஏடிகே எஃப்சியும், சென்னையின் எஃப்சியும், தங்கள் அணிகளிலுள்ள இரட்டையர்வீரர்களாய் தான் பெரிதும் நம்பியுள்ளனர்.

ஏடிகேவின் ராய் கிருஷ்ணா மற்றும் டேவிட் வில்லியம்சும், சென்னையின் எஃப்சியின் ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் நெரிஜுஸ் வர்கீசும் மொத்தமாக இந்த சீசனில் இது வரை 33 கோல்களை அடித்துள்ளனர்.

இந்த இரண்டு இணையர்களுக்கு நடுவிலான போட்டியின் முடிவே, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று மகுடம் சூடப்போவது எந்த அணி என்று தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏடிகே அணியின் இணைவதற்கு முன்பிருந்தே ராய் கிருஷ்ணாவும், டேவிட் வில்லியம்சும் ஒருவரை ஒருவர் வெல்லிங்டன் பீனிக்ஸ் ஏஎஃப்சி லீக்கின் மூலம் அறிந்திருந்தனர்.

இந்தியன் சூப்பர் லீக்கிலும் தங்கள் கூட்டணியை தொடர்ந்த அவர்கள், சிறப்பாக விளையாடி அந்த அணியை லீக் மேட்சுகளில் முன்னணிக்கு கொண்டு வந்தனர். கோச் ஆன்டானியோ ஹபாஸுக்கு பெரும் பலமாய் திகழ்ந்த இந்த இரட்டையர், ஏடிகே எஃப்சி அணி இறுதி போட்டிக்கு வந்ததிலும் பெரும் பங்கு வகித்தனர்.

"கால்பந்து என்பது ஒரே ஒரு வீரர் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம் அல்ல. நான் என்னுடைய பங்களிப்பை அளிக்கிறேன், அதே போல் எல்லா வீரர்களும் தங்களது வேலைகளை செய்கின்றனர். வில்லியம்சுடன் இணைந்து விளையாடுவதை நான் ரசிக்கிறேன். ஏ லீக்கில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு கை கொடுக்கிறது," என்கிறார் கிருஷ்ணா.

இது வரை 15 கோல்களை எடுத்துள்ள கிருஷ்ணா, இன்னும் ஒரு கோல் எடுத்தால் ஒபிச்சியின் சாதனையை முந்தி விடுவார். காயம் காரணமாக சில ஆட்டங்களில் விளையாட முடியாமல் போன வில்லியம்ஸ் இது வரை 7 கோல்களை அடித்துள்ளார்.

இதற்கு முன் ஒருவரை ஒருவர் அறியாத கிரிவெல்லாரோவும், வல்க்ஸிசும் சென்னையின் எஃப்சிக்காக இணைந்து விளையாட ஆரம்பித்த பிறகு சிறப்பான கூட்டணியாக திகழ்ந்தனர். வல்க்சிஸ் 14 கோல்களும், கிரிவெல்லாரோ 7 கோல்களும் இது வரை அடித்துள்ளனர்.

பிரேசிலை சேர்ந்த கிரிவெல்லாரோவும், லித்துவானியாவை சேர்ந்த வல்க்சிஸும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக உதவி கோல்களை அடித்துள்ளனர்.

"ரஃபேல் எங்களுக்கு மிக முக்கியமான வீரர். நாங்கள் எப்படி விளையாட வேண்டுமென்று நினைக்கிறோமோ அப்படி விளையாடுவார். வல்க்சிஸ்சும் அப்படியே" என்கிறார் கோச் கோய்லே.

இந்த இரு கூட்டணிகளால், கோவாவில் சனிக்கிழமையன்று நடக்கப்போகும் இறுதி போட்டியில் பொறி பறக்கும் என்பதில் ஐயமில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Both ATK and CFC believe their twins to score goals
Story first published: Thursday, March 12, 2020, 21:55 [IST]
Other articles published on Mar 12, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X