சாம்பியனை சந்திக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி.. புதிய பயிற்சியாளருக்கு காத்திருக்கும் சவால்!

கவுஹாத்தி : இந்த சீசனில் நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்துடன் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி ஒரு கடினமான தொடக்கத்தை சந்திக்கிறது.

இதே நார்த் ஈஸ்ட் அணிதான் பிளே-ஆஃப் சுற்றுகளில் பெங்களூரு அணியை வென்றது. ஒரு கட்டத்தில் இறுதிச் சுற்று வரை நார்த் ஈஸ்ட் அணி செல்லும் என பலர் நம்பினர்.

ஆனாலும் பயிற்சியாளர் ராபர்ட் ஜார்னி வரும் திங்களன்று பெங்களூரு ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி பெறும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.

பெங்களூரு எஃப்சி அணி கடந்த சீசனைவிட இந்த சீசனில் அணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும் பெங்களூரு அணியில் வேறு பயிற்சியாளரும், சில புதிய வீரர்களும் உள்ளனர். எனவே இந்த சீசனில் ஆட்டம் சற்று வித்தியசமாக இருக்கும். நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்றும். திங்கட்கிழமை ஆட்டத்தில் 3 புள்ளிகனை பெற முடியும் என்று நம்புவதாக அந்த அணியின் முன்னாள் ரியல் மாட்ரிட் விங்-பேக் தெரிவித்தார்.

முன்னாள் குரோஷிய சர்வதேச வீரர் எல்கோ ஸ்கட்டோரியிடமிருந்து பொறுப்பேற்ற பிறகு பெங்களூரு அணியின் முக்கிய இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் (சுனில் சேத்ரி, குர்பிரீத் சிங் சந்து, உதந்தா சிங், ஆஷிக் குருனியன் மற்றும் ராகுல் பெக்கே ) இருப்பதால் இந்த ஆட்டம் மிக சிறப்பாக இருக்கும். மேலும் கார்ல்ஸ் குவாட்ராட்டின் சிறப்பான பயிற்சி அந்த அணியை சிறப்பாக நடத்திச் செல்லும்.

ரோஹித் அடித்த "சேவாக்" ஷாட்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள்!

இது குறித்து கருத்து தெரிவித்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராபர்ட் ஜார்னி, இது எங்களுக்கு ஒரு சிறிய நன்மையாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு பயிற்சியாளராக எங்கள் அணிக்கு தேவையான அனைத்து பயிற்சியையும் முழு அர்ப்பணிப்போடு செய்வதாக தெரிவித்தார்.

ஆனால் சர்வதேச இடைவெளி காரணமாக பெங்களூரு அணியால் சிறப்பாக விளையாட முடியாது என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் பயிற்சியாளருடன் நல்ல இணக்கமாக இருக்கும் வீரர்களை அந்த அணி கொண்டுள்ளது. மேலும் அவர்கள் கடந்த சீசனில் இருந்து ஒன்றாக விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு கொஞ்சம் உதவக்கூடும் என்றாலும் அது நிச்சயமாக பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்று ஜார்னி கூறினார்.

இந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அசாமோவா கியான் புதிய வீரர்களுடன் அவர் அடாப்ட் ஆவதற்கு சில காலம் பிடிக்கும். இந்த அணி இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது. எனது அணுகுமுறையை அந்த வீர்கள் மீது செலுத்த முயற்சிக்கிறேன். மேலும் இந்த அணியுடன் இது எனது முதல் சீசன். அது மட்டுமல்லாமல் அணியில் புதிய வீரர்கள் உள்ளனர், எனவே இது கடினமாக இருக்கும் என்கிறார் ஜார்னி.

இந்த போட்டிகளில் வெற்றி பெற ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். உங்களது கடின உழைப்பு மற்றும் நீங்கள் சிந்தும் வியர்வை மட்டுமே நீங்கள் அங்கு செல்ல உதவும். இதனால் அசாமோவா மட்டுமல்ல, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

காயம் காரணமாக பல வீரர்கள் வெளியேறினாலும், ஃபிட்டாக இருக்கும் அணியுடன் பணி புரிவது தலைமை பயிற்சியாளர் ஜார்னிக்கு உண்டு என்றே சொல்லலாம். எது எப்படி இருந்தாலும், பெங்களூரு அணிக்கு எதிராக சில அற்புதமான வீரர்களை ஜார்னி களம் இறக்குகிறார்.

இளம் வயதிலேயே மிகுந்த ஆர்வத்துடன் விளையாட சில சுவாரஸ்யமான வீரர்கள் உள்ளனர், ஆனால் நாங்கள் ஒரு தனி யூனிட் என்பதால் தனி நபர்களைப் பற்றி பேசப்போவதில்லை என தெரிவித்தார். நாங்கள் மிக நன்றாக பயிற்சி பெற்றிருக்கிறோம்.

தற்போது நாங்கள் ஒரு வெற்றிக்கு தயாராக இருக்கிறோம். அடுத்து போட்டி நடைபெறும் நாளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Photos Courtesy : ISL Media

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : NEUFC new coach will face the challenge in the first game of ISL 2019-20 against Champions Bengaluru FC.
Story first published: Saturday, October 19, 2019, 16:57 [IST]
Other articles published on Oct 19, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X