கேரளா பிளாஸ்டர்ஸ் கனவு பிளாஸ்ட் ஆனது

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

பெங்களுரு: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் கேரளா பிளாஸ்டர்ஸ் கனவை, பெங்களூரு எப்சி தகர்த்தது. கடைசி லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு வென்றது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் தற்போது அரை இறுதியை எட்டியுள்ளது. பெங்களூரு எப்சி, எப்சி புனே சிட்டி, சென்னையின் எப்சி அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு நுழைந்து விட்டன.

Kerala Blasters blasted

கேரளா பிளாஸ்டர்ஸ், எப்சி கோவா, ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு அரை இறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்புகள் இருந்தது. இதில் கேரளா பிளாஸ்டஸ் அணி, நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியை சந்தித்தது.

இந்தப் போட்டிக்கு முன் நடந்த ஏடிகே அணிக்கு எதிரான ஆட்டத்தில் எப்சி கோவா வென்றபோதே, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அரை இறுதி வாய்ப்பு மங்கியது.

இருந்தாலும், பெங்களூரு எப்சியை வென்றால், ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், பெங்களூரு எப்சி 2-0 என்ற கோல் கணக்கில் வெல்ல, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அரை இறுதி கனவு முடிவுக்கு வந்தது.

இன்று நடக்கும் ஆட்டத்தில் புனே சிட்டி - டெல்லி டைனமோஸ், நாளை நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – மும்பை சிட்டி, 4ம் தேதி ஜாம்ஷெட்பூர் – கோவா மற்றும் ஏடிகே – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் கடைசி லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.

தற்போதைய நிலையில், எப்சி கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளில் ஒன்று அரை இறுதிக்கு நுழைய முடியும். 4ம் தேதி இரு அணிகளும் மோத உள்ள போட்டியில், யார் அரை இறுதிக்கு நுழைவார்கள் என்பது தெரியவரும்.

Story first published: Friday, March 2, 2018, 11:29 [IST]
Other articles published on Mar 2, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற