For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஒரு கேரளத்து சேட்டன் மாஸ்கோவுக்கு சைக்கிளில் போயி.. எதுக்குன்னு தெரியுமா?

மாஸ்கோ: கேரளாவைச் சேர்ந்த தீவிர மெஸ்ஸி ரசிகர் ஒருவர் சைக்கிளிலேயே ரஷ்யாவுக்குப் போயுள்ளார். உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் மாஜிக் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க இப்படி மெனக்கெட்டு பெடல் மிதித்து சைக்கிளில் ரஷ்யா வந்துள்ளார் கிளிபின் பிரான்சிஸ் என்ற அந்த 28 வயது இளைஞர்.

உலக அளவில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது கால்பந்துக்கு மட்டும்தான். இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பற்றி கத்திக் கொண்டிருந்தால், கேரளா, மேற்கு வங்கத்தில் மட்டும் கால்பந்து களேபரம் பயங்கரமாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த இரு மாநிலங்களிலும் கால்பந்து ரசிகர்கள் அதிகம்.

அப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தில் ஒருவர்தான் நம்ம பிரான்சிஸ். இவர் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் படு தீவிர ரசிகர் ஆவார்.

துபாயிலிருந்து பறந்து வந்தார்

துபாயிலிருந்து பறந்து வந்தார்

பிரான்சிஸ் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளைப் பார்க்க முடிவெடுத்தது முதல் இப்போது வரை நடந்தது ஒரு சுவாரஸ்யமான பெருங்கதை. இதை ஜெயலலிதா பாணியில் சுருக்கமான குட்டிக் கதை போல ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக பார்ப்போம், வாங்க. துபாயில் வேலை பார்த்து வரும் பிரான்சிஸ் பிப்ரவரி 23ம் தேதி கேரளாவுக்குப் பறந்து வந்தார்.

அடுத்து கப்பல்

அடுத்து கப்பல்

அங்கிருந்து கப்பல் பயணமாக ஈரானின் தெற்குக் கடலோர மாநிலமான ஹோர்மோஸானை அடைந்தார். அங்குள்ள பந்தர் அப்பாஸ் நகரிலிருந்து ரஷ்யாவுக்கு தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார் பிரான்சிஸ்.

வெரி ஹேப்பி

வெரி ஹேப்பி

கிட்டத்தட்ட நான்கு மாத பயணத்தின் நிறைவாக அவர் ரஷ்யா வந்து சேர்ந்தார். தனது பயணம் குறித்து அவர் கூறுகையில் நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நான்கு மாத பயணம். ஆனால் சோர்வே தெரியாமல் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார் பிரான்சிஸ். தற்போது டாம்போவ் என்ற ரஷ்ய நகருக்கு வந்து சேர்ந்துள்ளார் பிரான்சிஸ்.

புதிய அனுபவம்

புதிய அனுபவம்

தொடர்ந்து பிரான்சிஸ் கூறுகையில், ஜூன் 26ம் தேதி நடைபெறும் பிரான்ஸ் - டென்மார்க் போட்டியைக் காண காத்திருக்கிறேன். தினசரி புதிய அனுபவம் கிடைக்கிறது. புதிய மனிதர்களைப் பார்க்க முடிகிறது. புதிய நிலப்பரப்பு, புதிய கலாச்சாரம்.. அருமையாக இருக்கிறது ரஷ்ய அனுபவம் என்றார் பிரான்சிஸ்.

இடையில் ஒரு சிக்கல்

இடையில் ஒரு சிக்கல்

இவர் ரஷ்யாவுக்கு வரும் வழியில் அஜர்பைஜானிலிருந்து ஜார்ஜியாவுக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லையாம். இத்தனைக்கும் முறையான பேப்பர்கள் இருந்தும் கூட விடவில்லையாம். அதேசமயம், ஜெர்னியிலிருந்து சைக்கிளில் வந்த ஒருவரை மட்டும் அனுமதித்தார்களாம். அப்போது அந்தப் பகுதியில் உள்ள மக்கள்தான் இவருக்கு தங்களது வீடுகளில் அடைக்கலம் கொடுத்து, சாப்பாடும் போட்டு மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்களாம்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

பிறந்த நாள் கொண்டாட்டம்

இடையில் இவருக்குப் பிறந்த நாளும் வந்துள்ளது. அதை ஈரானில் வைத்துக் கொண்டாடியுள்ளார் பிரான்சிஸ். சூடான கெபாப் மற்றும் உள்ளூர் சரக்கான இஷ்டாக் ஆகியவற்றுடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார். வாழ்க்கையில் இதை மறக்க முடியாதுண்ணோவ்.. என்று கூறி சிரிக்கிறார் பிரான்சிஸ்.

மாஸ்கோவுக்கு 21ம் தேதி

மாஸ்கோவுக்கு 21ம் தேதி

21ம் தேதி வாக்கில் இவர் மாஸ்கோவை சென்றடையத் திட்டமிட்டுள்ளார். அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியைச் சந்திப்பதுதான் இவரது முக்கிய நோக்கமாக உள்ளது. அதெப்படி சாத்தியம் என்று கேட்டால், ஏங்க இத்தனை தூரம் சைக்கிளை மிதித்து வந்துள்ளேன். இதுவே முடியும்போது மெஸ்ஸியைப் பார்ப்பது முடியாத காரியமா.. நம்பிக்கை வேண்டும் பாஸ் என்று கூறி அசத்துகிறார் பிரான்சிஸ்.

Story first published: Tuesday, June 19, 2018, 11:01 [IST]
Other articles published on Jun 19, 2018
English summary
A kerala based Football fan Francis has travelled to Russia by Cycle to meet his childhood hero Lionel Messi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X