For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

திருட்டு போன மரடோனாவின் ரூ.1 கோடி மதிப்பிலான வாட்ச்… இந்தியாவில் கண்டுபிடிப்பு..!!

அசாம்: கால்பந்து உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர் மரடோனா. கால்பந்து மூலம் பெரும் பணத்தையும் சேர்த்துள்ளார்.

1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி உலகக் கோப்பையை வென்று தந்தவர். 1990 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை அணியை அழைத்து சென்றவர் என பல்வேறு சாதனைகளை படைத்தவர்

எத்தனை சாதனைகளை படைத்துள்ளாரோ, அதே போல் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். போதை மருந்து பயன்படுத்தி, பல்வேறு வழக்குகளிலும் சிக்கியவர் மரடோனா

தீவிரவாதிகளால் கிரிக்கெட் வீரர்களுக்கு அச்சுறுத்தல் .. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த உத்தரவு..!!தீவிரவாதிகளால் கிரிக்கெட் வீரர்களுக்கு அச்சுறுத்தல் .. 5 ஆயிரம் ராணுவ வீரர்களை நிறுத்த உத்தரவு..!!

 ரூ.1 கோடி வாட்ச்

ரூ.1 கோடி வாட்ச்

பெரும் பணக்காரர்கள் என்றாலே சாதாரண கை கடிகாரத்தை கூட அதிக விலை மதிப்புள்ளதாக பார்த்து தான் வாங்குவார்கள் அல்லவா...மரடோனா என்ன சும்மவா..? மரடோனா கட்டியிருந்த வாட்சின் மதிப்பு இந்திய ரூபாய் படி எவ்வளவு தெரியுமா..?? 1 கோடியே 32 லட்சம் ரூபாய்.!! மரடோனா காலமான பிறகு, அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் துபாயில் பாதுகாக்கப்பட்டு வந்தது

திருட்டு

திருட்டு

இந்த நிலையில், அந்த வாட்ச் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் ,துபாய் போலீசாரிடம் புகார் அளித்தது. அப்போது விசாரணையில் இந்தியாவை சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு பிறகு நிறுவனத்தை விட்டு வென்றுவிட்டதாக தெரிந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் திரும்பியது.

அசாம் காவலர்

அசாம் காவலர்

இதனையடுத்து அந்த பாதுகாவலர் தற்போது அசாமில் இருந்து வருவதாக விசாரணையில் தெரிந்தது. இது குறித்து அசாம் போலீசாரின் உதவி நாடப்பட்டது. இதனையடுத்து புகாருக்குள்ளான வாசித் ஹூசைனை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர் எதையோ விற்க முயன்றது தெரியவந்தது

வாட்ச் மீட்பு

வாட்ச் மீட்பு

அது மரடோனாவின் வாட்ச் தான் என உறுதியானதை அடுத்து அதிகாலை 4 மணிக்கு வாசித் ஹூசைனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதனையடுத்து, அந்த வாட்ச் துபாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது குறித்து சமூகு வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அசாம் முதலமைச்சர், துபாய் போலீசாருடன் இணைந்து சர்வதேச வழக்கில் அசாம் போலீசார் சிறப்பாக பணியாற்றி மரடோனாவின் வாட்சை மீட்டதாக பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Saturday, December 11, 2021, 15:31 [IST]
Other articles published on Dec 11, 2021
English summary
Maradona Expensive stolen watch found in Assam. With the Help of Dubai Police. Assam Police Narrowed down the culprit and They got the Watch back.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X