For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எப்படி உருண்டு புரளனும்..... சிறுவர்களுக்கு பயிற்சி.... அளிப்பது யார் தெரியுமா!

கால்பந்து உலகக் கோப்பையின்போது, தரையில் உருண்டு புரண்டு பேமசானார் பிரேசிலின் நெய்மர். தற்போது அது குறித்த பயிற்சி அளிக்கிறார்.

டெல்லி:உருண்டு புரளனும் என்றதும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்தான். அவருடைய அந்த புகழ்பெற்ற உருண்டு புரண்டகாட்சிகளை கிண்டல் செய்யாதவர்களே இல்லை. இந்த நிலையில், எவ்வாறு, எந்த நேரத்தில், எப்படி உருண்டு புரள வேண்டும் என்று சிறுவர்களுக்கு கற்றுத் தந்தார் நெய்மர்.

ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, பிரேசில் வீரர் நெய்மர், காலில் அடிப்பட்டு, மைதானத்தில் உருண்டு புரண்டு கதறிய காட்சிகளை, பலரும் நாடகம் என்று விமர்சனம் செய்தனர். தொட்டதெற்கெல்லாம் அவர் தரையில் விழுந்து உருண்டு பரிதாபத்தை தேடினார் என்று விமர்சிக்கப்பட்டது.

Neymar mocks himself on the rolling act

ஒரு புள்ளி விபரத்தின்படி, இந்த உலகக் கோப்பையில், நெய்மர் 14 நிமிடங்கள், மைதானத்தில் உருண்டுள்ளார்.

நெய்மரை கிண்டல் செய்து மீம்ஸ்கள் என, சமூகதளங்களில் பலரும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மற்றவர்கள் கிண்டல் செய்யும் நிலையில், தன்னைத் தானே கிண்டல் செய்து, நெய்மர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஒரு கார் பார்க்கிங் பகுதியில், சிறுவர் சிறுமிகளுடன் நெய்மர் உள்ளார். டேக் ஆப், ஹிட், பவுல் என்று சிரித்துக் கொண்டே, எப்படி உருண்டு புரளனும் என்று அவர் கற்றுத் தருகிறார்.

இதனிடையில் மற்றவர்கள் தன்னை விமர்சனம் செய்வதைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறியுள்ள நெய்மர், கால்பந்து கிளப் அணியான பிஎஸ்ஜிக்கு தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து கிளப் அணிக்காக அவர் விளையாட உள்ளார். ரசிகர்களே மீம்ஸ் போட, சாரி, மேட்ச் பார்க்க தயாராகுங்க.

Story first published: Saturday, July 21, 2018, 13:30 [IST]
Other articles published on Jul 21, 2018
English summary
Brazil neymar teaches children on how to roll.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X