For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சாம்பியனான அர்ஜென்டினா.. ரூ.342 கோடியை அள்ளிச் செல்லும் வீரர்கள்.. பிரான்ஸ்-க்கு எவ்வளவு தெரியுமா?

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வென்று சாம்பியனான அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நவம்பர் 20ம் தேதி மிக பிரமாண்டமாய் தொடங்கியது. குரூப் சுற்று, நாக் அவுட் சுற்று, காலிறுதி ஆட்டம், அரையிறுதி ஆட்டம், இறுதிப்போட்டி என்று அட்டவணை திட்டமிடப்பட்டது.

64 அணிகள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், அர்ஜென்டினா அணியும் தகுதிப்பெற்றன. இது லயோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

56 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை.. கோல்டன் ஷூவை வென்ற பிரான்ஸ் வீரர் எம்பாபே.. பைனலில் கலக்கிய இளம் வீரர் 56 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை.. கோல்டன் ஷூவை வென்ற பிரான்ஸ் வீரர் எம்பாபே.. பைனலில் கலக்கிய இளம் வீரர்

அர்ஜென்டினா வெற்றி

அர்ஜென்டினா வெற்றி

இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஒவ்வொரு நிமிடமும், அயன் படத்தில் சூர்யா சொல்வது போல் "நெருப்பு மாதிரி இருந்துச்சுனா" என்ற வகையில் சென்றது. 80 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா அணியின் பக்கம் இருந்த ஆட்டம், அடுத்த ஒரே நிமிடத்தில் பிரான்ஸ் பக்கம் திரும்பியது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மெஸ்ஸி ஆனந்த கண்ணீர்

மெஸ்ஸி ஆனந்த கண்ணீர்

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. கடைசி உலகக்கோப்பையில் ஆடிய லயோனல் மெஸ்ஸியும் உலகக்கோப்பையை வென்ற பெருமையோடு ஆனந்த கண்ணீரை சிந்தினார். இந்த நிலையில் உலகக்கோப்பையை வென்ற அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

ரூ.342 கோடி பரிசுத்தொகை

ரூ.342 கோடி பரிசுத்தொகை

ஃபிஃபா உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடியும், நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணிக்கு ரூ.206 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

காலிறுதிக்கான பரிசு எவ்வளவு?

காலிறுதிக்கான பரிசு எவ்வளவு?

காலிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளான பிரேசில், நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு தலா ரூ.140 கோடி வழங்கப்படும். அதேபோல் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற அமெரிக்கா, செனகல், ஆஸ்திரேலியா, போலந்து, ஸ்பெயின், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, தென் கொரியா ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 107 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, December 19, 2022, 0:43 [IST]
Other articles published on Dec 19, 2022
English summary
The prize money of Rs.342 crore has been given to Argentina, who won the FIFA World Cup football final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X