For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கோல் போட்டுவிட்டு அழும் பிரேசில் வீரர்கள்: மனநல நிபுணர் ஆலோசனை

ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் கால்பந்து வீரர்கள் எதிரியை வீழ்த்தி வெற்றியை சுவைக்கும் போதும் கண்ணீர் சிந்துகின்றனர். அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட அழுகை ரசிகர்களிடையே அதிர்ச்சியையையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அழுகை ஆபத்தில் முடியும் என்பதால் பிரேசில் கால்பந்து அணி வீரர்களின் உணர்ச்சிவசப்படும் நிலையை கட்டுப்படுத்தும் வகையில் மனநல நிபுணரைக் கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.

அழும் வீரர்கள்

அழும் வீரர்கள்

சிலி அணிக்கு எதிரான நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் பெனால்டி கிக் முறையில் பிரேசில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு அதன் முன்னணி வீரர்கள் நெய்மார், கோல் கீப்பர் சீசர், டேவிட் லூயிஸ், கேப்டன் தியாகோ சில்வா உள்ளிட்ட வீரர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டனர்.

அதிர்ச்சியில் பயிற்சியாளர்

அதிர்ச்சியில் பயிற்சியாளர்

இது பிரேசில் கால்பந்து ரசிகர்களையும், அணியின் முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர் ஸ்கொலாரி ஆகியோரையும் சற்றே நிலைகுலையச் செய்துவிட்டதாம்.

தொடர் அழுகை ஏன்?

தொடர் அழுகை ஏன்?

சிலி அணிக்கு எதிரான பெனால்டி வெற்றியிலிருந்து தொடங்கியதல்ல இந்த அழுகை. குரேஷியா அணிக்கு எதிராக முதல் போட்டியில் பிரேசில் தேசிய கீதம் ஒலிக்கும் போதே நெய்மார் அழுதுள்ளார். அதன் பிறகு ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் வீரர்களின் அழுகைப் படலம் தொடர்ந்துள்ளது.

உணர்ச்சிவசப்பட்ட நிலை

உணர்ச்சிவசப்பட்ட நிலை

பிரேசில் வீரர்கள் பந்துகள் தங்கள் காலுக்கு வந்தவுடன் உணர்ச்சிவசப்படுகின்றனர், என்றும் இதனால் கட்டுப்பாட்டை இழப்பதோடு, புத்திசாலித் தனமாக பந்தை எடுத்துச் செல்லவும் தவறுகின்றனர் என்று ஏற்கனவே கார்டியன் இதழில் வெளிவந்த கட்டுரையில்எழுதியிருந்தனர்.

அழுகையை நிறுத்தங்கள்

அழுகையை நிறுத்தங்கள்

வீரர்களின் அழுகையையால், அதிர்ச்சியடைந்துள்ள அணியின் தொழில்நுட்ப இயக்குநர் கார்லோஸ் ஆல்பர்டோ பெரைரா,

"ஒவ்வொன்றிற்கும் அழுகையா? ஜூலை 13ஆம் தேதி இறுதிப்போட்டி வரை அழுது கொண்டேதான் இருக்கப்போகிறோமா? பெனால்டி ஷூட் அவுட்டில் அழுகை, தேசிய கீதம் பாடும்போது அழுகை... போதும் அழுகையை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

மனநல மருத்துவர் ஆலோசனை

மனநல மருத்துவர் ஆலோசனை

இப்படி சட்டென்று உணர்ச்சிவசப்படும் மன நிலையில் உள்ளவர்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் பயிற்சியாளர் ஸ்கொலாரிக்கு பழக்கமான ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் ரெஜினா பிராண்டோ பிரேசிலுக்கு விரைந்து வீரர்களுடன் உரையாடியுள்ளார்.

அடிக்கடி அழுகை

அடிக்கடி அழுகை

1970ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டன் கார்லோஸ் ஆல்பர்டோ கூறுகையில், இன்றைய வீரர்கள் ரொம்பவே அழுகின்றனர் எனும் அளவுக்கு இந்த இளம் வீரர்களின் அழுகை இருந்தது. இதனாலேயே உடனடி கவனம் பெற்றுள்ளது.

ஆலோசனையில் பலனிருக்குமா?

ஆலோசனையில் பலனிருக்குமா?

மனநல நிபுணர் தற்போது வீரர்களுடன் தொடர்ந்து பேசியது மூலம் ஓரளவுக்கு அழுகை கட்டுக்குள் வரும் என்று பிரேசில் அணியின் நிர்வாகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, July 3, 2014, 17:54 [IST]
Other articles published on Jul 3, 2014
English summary
Tears shed by Neymar and his fellow Brazilian stars at the Soccer World Cup have shocked some of the country's football legends and coach Luiz Felipe Scolari has ordered extra coaching with the team psychologist , a report said Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X