For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வாகை சூடுமா அர்ஜென்டினா? இறுதிக்கு முன்னேறும் வழி என்ன? நாக் அவுட்டில் தொடரும் மெஸ்ஸியின் சாபம்!

தோஹா: நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான பாதையை பற்றி பார்க்கலாம்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளான ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் தொடங்க உள்ளது.

குரூப் சுற்று போட்டிகளில் முன்னாள் சாம்பியன்களான உருகுவே, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

மெக்சிகோவை எதிர்க்க நாங்கள் தயார்.. கம்பேக் கொடுக்குமா அர்ஜென்டினா? களமிறங்கும் மெஸ்ஸி! மெக்சிகோவை எதிர்க்க நாங்கள் தயார்.. கம்பேக் கொடுக்குமா அர்ஜென்டினா? களமிறங்கும் மெஸ்ஸி!

அர்ஜென்டினாவின் எழுச்சி

அர்ஜென்டினாவின் எழுச்சி

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள ஒவ்வொரு அணிகளும் விளையாடிய கடைசி போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றங்களும், எழுச்சியும், வெற்றியும், தோல்வியும் கால்பந்து உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதேபோல் 2014, 2018 உலகக்கோப்பையை போல் தோல்வியை சந்திக்காமல் எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் நடப்பு உலகக்கோப்பையே சிறந்த உலகக்கோப்பை என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அதிகரித்துள்ளது.

அர்ஜென்டினா என்ன செய்ய வேண்டும்?

அர்ஜென்டினா என்ன செய்ய வேண்டும்?

இதனிடையே சவுதி அரேபியா அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பின் அர்ஜென்டினா அணி மீண்டு வந்த அடுத்தடுத்து இரு வெற்றியை பெற்றது ரசிகர்களிடையே அந்த அணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பையில் அர்ஜென்டினா வெற்றிபெறும் என்று மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.

அர்ஜென்டினா - நெதர்லாந்து

அர்ஜென்டினா - நெதர்லாந்து

இன்று நள்ளிரவு நடக்க உள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெல்லும் பட்சத்தில், காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அல்லது அமெரிக்கா அணியை அர்ஜென்டினா எதிர்கொள்ளும். இதில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் நிலையில், பெரும்பாலும் நெதர்லாந்து - அர்ஜென்டினா அணிகளே காலிறுதி சுற்றில் மோத அதிக வாய்ப்புகள் உள்ளது.

அரையிறுதியில் யாருடன் மோதல்?

அரையிறுதியில் யாருடன் மோதல்?

காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை அர்ஜென்டினா வீழ்த்தினால், அடுத்து நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் அணிகளில் ஒன்றான பிரேசில் அல்லது கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய குரோஷியா அணியை எதிர்த்து விளையாட வாய்ப்புகள் உள்ளது. சமபலம் வாய்ந்த அணிகள் மோத உள்ள போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால், இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.

இறுதிப் போட்டியில் யார்?

இறுதிப் போட்டியில் யார்?

அப்படி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது போர்ச்சுகல் அணியை அர்ஜென்டினா அணி எதிர்கொள்ளவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இனி அர்ஜென்டினா ஆடவுள்ள ஒவ்வொரு போட்டியும் அவ்வளவு எளிதாக இருக்காது. அர்ஜென்டினா அணி வீரர்களின் முழு திறமையும் வெளிப்படுத்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

மெஸ்ஸி தடுமாற்றம்

மெஸ்ஸி தடுமாற்றம்

அதுமட்டுமல்லாமல் ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்ஸி இதுவரை கோல் அடித்ததே இல்லை. இந்த மோசனான சாதனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மெஸ்ஸி ஆட்டம் வெளிப்படும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, December 3, 2022, 18:25 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Argentina recovered from their shock defeat to Saudi Arabia with back-to-back wins over Mexico and Poland. Now Argentina is going to play with Australia in RO16.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X