For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

போட்டியின்போது 'டர் புர்'... நடுவர் டென்ஷன்.. 'ரெட்' காட்டி வெளியேற்றப்பட்ட ஸ்வீடன் கால்பந்து வீரர்

ஸ்டாக்ஹோம்: கால்பந்துப் போட்டியின்போது ஒரு வீரர் டர்புர் என காஸ் விட்டபடி விளையாடியதால் கோபமடைந்த நடுவரா் அவருக்கு 2 முறை மஞ்சள் கார்டு காட்டி எச்சரித்தார். ஆனாலும் அந்த வீரர் விடவில்லை. தொடர்ந்து விட்டு விளையாடி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன நடுவர் ரெட் கார்டு காட்டி வீரரை மைதானத்தை விட்டே வெளியேற்றினார்.

அந்த வீரர் பெயர் ஆடம் லின்டின் ஜங்க்விஸ்ட். ஸ்வீடன் நாட்டுக்காரர். அங்குள்ள ஸ்வீடிஷ் புட்பால் என்ற லீக் போட்டியில் பெர்ஷாஜென் எஸ்கே என்ற அணிக்காக ஆடி வருகிறார்.

Swedish footballer sent off for farting during match

இந்த அணியின் போட்டி ஒன்றில் ஆடியபோது அவர் அடிக்கடி "கேஸ்" விட்டபடி விளையாடியுள்ளார். இதனால் நடுவருக்கு எரிச்சலாகியுள்ளது. ஆடமைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் ஆடம் நிறுத்தவில்லை (அல்லது நிறுத்த முடியவில்லை). மேலும் நடுவர் பக்கமாக வரும்போது மட்டுமே ஆடம் கேஸ் விட்டதால், நம்மை கிண்டல் செய்கிறாரோ என்று கடுப்பாகியுள்ளார் நடுவர்.

இதனால் 2 முறை மஞ்சள் கார்டு காட்டி எச்சரித்தார். அப்படியும் விடவில்லை ஆடம். தொடர்ந்து கேஸ் விட்டபடியே விளையாடினார். இதனால் ஆத்திரமடைந்த நடுவர் சிவப்பு கார்டு காட்டி மைதானத்தை விட்டு ஆடமை வெளியேற்றினார். இதனால் ஆடம் அதிர்ச்சியானார். இருப்பினும் அவர் வெளியேறினார்.

இந்த பஞ்சாயத்து குறித்து ஆடம் கூறுகையில், எனக்கு வயிறு சரியில்லை. அப்செட்டாக இருந்தது. இதனால் அடிக்கடி வாயு பிரிந்தது. அடக்க முடியுமா அதை.. எனவேதான் வந்ததை வெளியேற்றினேன்.. நடுவரோ என்னை மைதானத்தை விட்டு வெளியேற்றி விட்டார் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், விளையாட்டில் இப்படியெல்லாம் கூடவா நடக்கும். இப்படி ஒரு சம்பவத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை. எனக்கு வந்தது, வெளியேற்றினேன். இது இயற்கை. வெளியேற்றாமல் அடக்கினால்தான் உடலுக்கு கேடு. இதை நடுவர் தவறாக எடுத்துக் கொண்டால் எப்படி என்றார் ஆடம்.

சவுண்டு ஜாஸ்தி பாஸ்!

"சம்பவத்தை" நேரில் பார்த்த சாட்சி ஒருவர் இருக்கிறார். அவர் எதிர் அணி வீரர் கிறிஸ்டோபர் லின்டே. அவர் கூறுகையில், நான் சற்று தூரத்தில்தான் ஆடிக் கொண்டிருந்தேன். சற்று சத்தமாகத்தான் கேஸ் விட்டார் ஆடம். எனக்கு தெளிவாகவே கேட்டது. ரொம்ப வினோதமானது இது. எட்டு வயது முதல் நான் கால்பந்து ஆடி வருகிறேன். இப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவத்தை நேரில் பார்க்கிறேன் என்றார்.

விடுங்கய்யா.. விடுங்கய்யா.. ரொம்ப நாறுது!

Story first published: Tuesday, June 28, 2016, 11:32 [IST]
Other articles published on Jun 28, 2016
English summary
A Swedish football referee sent a player off for farting on the pitch. He gave Adam Lindin Ljungkvist two yellow cards, and finally a red, when he broke wind during a match. The referee, Dany Kako, confirmed that Ljungkvist had received the second yellow card for breaking wind, explaining: "I perceived it as deliberate provocation. He did it on purpose and it was inappropriate. Therefore, he received a yellow card."
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X