யாரு டாப்பு… பெங்களூரு, சென்னை இன்று மோதல்!

By: SRIVIDHYA GOVINDARAJAN

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாளை நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்சி அணியை சென்னையின் எப்சி மீண்டும் சந்திக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால், பெங்களூரு எப்சியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்க சென்னையின் எப்சிக்கு வாய்ப்பு உள்ளது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, 12 போட்டிகளில் 7 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகளுடன், 23 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Tough fight for Chennaiyin FC

பெங்களூரு எப்சி 13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 27 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக லீக் சுற்று இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையில் எப்சி. வென்றது. சொந்த மண்ணில் விளையாட உள்ளது, பத்மபூஷண் கேப்டன் கூல் டோணியின் சென்னையின் எப்சி,க்கு சாதகமாகும்.

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

Story first published: Monday, February 5, 2018, 12:28 [IST]
Other articles published on Feb 5, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற