For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

தவறான பெனால்டி கிக் தந்த நடுவர்.. விட்டுக் கொடுத்த எதிரணி வீரர்.. ஈரான் டென்மார்கின் சூப்பர் மேட்ச்

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் டென்மார்க் ஈரான் மோதிய ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஒன்றை குறித்து கண்டிப்பாக நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

By Shyamsundar

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் டென்மார்க் ஈரான் மோதிய ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஒன்றை குறித்து கண்டிப்பாக நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

இப்போது 2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வைரலாக சென்று கொண்டுள்ளது. முக்கியமான வீரர்கள் எல்லோரும் சிறிய காயத்திற்கு பெரிய பெரிய சண்டை போடுகிறார்கள். களத்தில் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் 2003 ஒலிம்பிக் போட்டியில், டென்மார்க் ஈரான் மோதிய போட்டியில் மிகவும் அழகான சம்பவம் ஒன்று நடந்தது. இன்னும் பல காலம் கால்பந்து உலகம் இந்த அழகான சம்பவத்தை பேசலாம்.

சிறிய தவறு

இந்த போட்டியில் ஈரான் வீரர் ஒரு சிறிய தவறை செய்தார். மைதானத்தில், ரசிகர்கள் ஊதிய விசிலை, நடுவர் ஊதிய விசில் என்று நினைத்துக் கொண்டு பாதி ஆட்ட நேரம் முடிந்துவிட்டது என்று பந்தை கையில் எடுத்து சென்றுள்ளார். இதை தவறு என்று கூறிய நடுவர், டென்மார்க் அணிக்கு பெனால்டி கிக் அடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் ஈரான் அணி வீரர்கள் எவ்வளவு கேட்டும் பெனால்டி வாய்ப்பை நடுவர் திரும்ப பெறவில்லை. இந்த நிலையில் ஆச்சர்யமாக டென்மார்க் அணியின் பயிற்சியாளர் தங்கள் அணியில் பெனால்டி கோல் அடிக்க போகும் வீரரை அழைத்தார். அவரிடம் நீ கோல் அடிக்க வேண்டாம், மிஸ் செய்துவிடு என்று கூறியுள்ளார். அதற்கு ஈரான் அணியின் பயிற்சியாளர் நன்றி தெரிவித்தார்.

அடிக்கவில்லை

அடிக்கவில்லை

இந்த நிலையில் டென்மார்க் வீரர் கோல் அடிக்க சென்றார். ஈரான் கோல் கீப்பர் என்ன நடக்கும் என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். ஆனால் டென்மார்க் வீரர் பந்தை கோல்போஸ்ட் நோக்கி அடிக்காமல் கோல் போஸ்டுக்கு வெளியே அடித்தார். மொத்தமாக இரண்டு நாட்டு ரசிகர்களும் மாறி மாறி கோஷம் எழுப்பினார்கள். வீரர்கள் மாற்றி மாற்றி கட்டிப்பிடித்தனர்.

விருது வாங்கினார்

விருது வாங்கினார்

இதில் டென்மார்க் அணி, விட்டுகொடுத்து, 1-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதேபோல் வெற்றி பெற்ற ஈரான் போட்டியை எந்த விதத்திலும் கொண்டாடவில்லை. இதில் கோல் அடிக்காமல் இருந்த டென்மார்க் வீரர் வெய்க்ரோஸ்ட் அந்த ஒலிம்பிக்கில் ஃபேர் பிளே விருது வாங்கினார்.

Story first published: Thursday, July 5, 2018, 9:40 [IST]
Other articles published on Jul 5, 2018
English summary
In 2003, Denmark and Iran faces each othe. In this match an Iranian player mistook a whistle from the crowd as being the referee’s half-time signal. So he has picked the ball up with his hands in the penalty area. The referee gave Denmark a penalty kick. But consultation with national team coach Morten Olsen, Morten Wieghorst missed the penalty on purpose.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X