ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

Posted By:

ககாமிகாரா: ஜப்பானில் நடைபெற்ற 9-வது ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் நடைபேற்றது. அரை இறுதியில் ஜப்பானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

India win women's hockey Asia Cup

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி பந்தாடியிருந்தது.

அதே வேகத்துடன் இன்று இறுதிப் போட்டியிலும் சீனாவை இந்திய அணி எதிர்கொண்டது. 24-வது நிமிடத்தில் இந்திய அணியின் நவ்ஜோத் கவுர் கோல் அடித்தார்.

47-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் சீனா கோல் அடித்தது. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு தரப்பட்டது. இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்து மீண்டும் சமநிலையில் இருந்தன.

சட்டன் டெத் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைத்தது. இந்த வாய்ப்பை சீனா தவறவிட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை அணிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.

ஆசிய கோப்பை இந்திய மகளிர் ஆக்கி அணி வெல்வது இது 2-வது முறையாகும். 2004-ம் ஆண்டு ஆசிய மகளிர் கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இத்தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. இதனால் இந்திய வீராங்கனைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கின்றனர். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும். முன்னதாக 2004-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இப்போட்டி குறித்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி கூறும்போது, "மகளிர் உலகக் கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெறவேண்டுமானால் ஆசிய கோப்பையை வென்றாக வேண்டும். எனவே இன்றைய போட்டியில் வெல்ல கடுமையாக போராடுவோம்" என்றார்.

Story first published: Sunday, November 5, 2017, 17:30 [IST]
Other articles published on Nov 5, 2017
Please Wait while comments are loading...