For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாகித் மரணம்.. விளையாட்டு உலகம் அதிர்ச்சி

By Veera Kumar

டெல்லி: அர்ஜுனா விருது பெற்ற, புகழ் பெற்ற இந்திய, முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகித், கிட்னி பிரச்சினையால் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்த முகமது ஷாகித், தனது 19வது வயதில் இந்திய ஹாக்கி அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்.

1980ல், மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவவர். ஃபார்வேர்ட் பிளேயரான இவரது வேகமும், துரிதமாக சிந்திக்கும் ஆற்றலும் எதிரணிகளை குலை நடுங்க செய்தன.

Indian hockey legend Mohammed Shahid dies aged 56

முகமது ஷாகித்துக்கு, பர்வீன் என்ற மனைவியும், இரட்டை குழந்தைகளாக பிறந்த ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட முகமது ஷாகித், 3 வாரங்கள் முன்பு, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

உயர் சிகிச்சைக்காக அவர், குர்கானிலுள்ள மெடான்தா மென்டிசிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு அவரை சமீபத்தில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார், ரியோ ஒலிம்பிக்கிற்கான உள்ள இந்திய ஹாக்கி அணி கேப்டன், பி.ஆர்.ஸ்ரீஜேஷ்.

முகமது ஷாகித் மரணமடைந்தது குறித்து கரது்து தெரிவித்த ஸ்ரீஜேஷ், நான் பேச்சற்றவனாக உள்ளேன். இந்திய ஹாக்கிக்கு இது பெரும் இழப்பு. இந்திய ஹாக்கியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர் முகமது ஷாகித், என்று தெரிவித்தார். இதேபோல மேலும் பல விளையாட்டு பிரபலங்களும் முகமது ஷாகித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, July 20, 2016, 13:05 [IST]
Other articles published on Jul 20, 2016
English summary
Mohammed Shahid, one of the greatest names in Indian hockey has died at a Gurgaon hospital owing to a severe liver condition and kidney failure. He was 56.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X