சீனியர்களுக்கு கல்தா.. புது ரத்தம் பாய்ச்சுகிறது ஹாக்கி இந்தியா!

Posted By: Staff

டெல்லி: அடுத்த மாதம் புவனேஸ்வரில் நடக்க உள்ள ஹாக்கி உலக லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவி்க்கப்பட்டுள்ளது. இதில், நீண்ட அனுபவம் உள்ள மூத்த வீரர்கள் சர்தார் சிங், ரமன்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஜூனியர் அணியில் இருந்த பலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோச்சாக, நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே பொறுப்பேற்றதில் இருந்து, இந்திய ஹாக்கி அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆடவர் அணி ஆசியக் கோப்பையை வென்றது.

அடுத்த மாதம் புவனேஸ்வரில், ஹாக்கி உலக லீக் போட்டிகள் நடக்க உள்ளன. அதைத் தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி, ஏஷியன் கேம்ஸ், உலகக் கோப்பை, ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகள் என, தொடர்ந்து பல்வேறு போட்டிகள் வர உள்ளன.

இதற்காக வலுவான இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் கோச் மரிஜ்னே மற்றும் ஹாக்கி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஹாக்கி உலக லீக் போட்டிக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

 சீனியர்கள் இடம்பெறவில்லை

சீனியர்கள் இடம்பெறவில்லை

அதில் கேல்ரத்னா விருது பெற்ற, முன்னாள் கேப்டனான சீனியர் வீரர் சர்தார் சிங், அனுபவம் மற்றும் எப்போதும் நம்பக் கூடிய சுரேந்தர் குமார், ரமன்தீப் சிங், சத்பீர் சிங் போன்றோர் பெயர்கள் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் கடந்தாண்டு உலகக் கோப்பை வென்ற ஜூனியர் அணியைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், திப்சன் திர்க்கே உள்பட பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி நிர்வாகத்தின் விளக்கம்

ஹாக்கி நிர்வாகத்தின் விளக்கம்

அரசியல்வாதிகள் என்றால் கோவணம் தான் கட்டணுமா என்று தமிழகத்தை கொள்ளையடித்ததற்கு டி.டி.வி., தினகரன் விளக்கம் சொன்னதுபோல, ஹாக்கி நிர்வாகமும் புது விளக்கம் கூறியுள்ளது. சீனியர் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களுடைய பெயர்கள் சேர்க்கப்படவில்லை என, ஹாக்கி நிர்வாகம் கூறியுள்ளது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் தான் அவர்களுடைய திறமைகள் தெரியவரும். அடுத்தடுத்து பல்வேறு போட்டிகள் வர உள்ளதால், இது அவசியமாகிறது. சீனியர் வீரர்கள் தேவைப்படும்போது பயன்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனுடன் மோதல்

நடப்பு சாம்பியனுடன் மோதல்

ஹாக்கி உலக லீக் போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், வரும் டிசம்பர் 1ம் தேதி துவங்குகிறது. பி பிரிவில் இந்தியா, நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இடம்பெற்றுள்ளன. தனது முதல் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்கிறது.

அணி விவரம்:

அணி விவரம்:

கோல் கீப்பர்கள் - ஆகாஷ் அனில் சிக்தே, சூரஜ் கர்கெரா.தடுப்பாட்டகாரர்கள் - ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், திப்சன் திர்க்கே, வருண் குமார், ருபிந்தர்பால் சிங், பீரேந்திர லாக்ரா.

நடுகள ஆட்டக்காரர்கள் - மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்சென்சனா சிங் (துணைக் கேப்டன்), எஸ்.கே. உத்தப்பா, சுமித், கோதாஜித் சிங். முன்கள ஆட்டக்காரர்கள் - எஸ்.வி. சுனில், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங்.

Story first published: Saturday, November 18, 2017, 12:45 [IST]
Other articles published on Nov 18, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற