மெடிக்கல் மிராக்கிள், தமிழ் தலைவாஸ் ஜெயிச்சுடுச்சு!

Posted By: Staff

ஜெய்ப்பூர்: இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி, மிகவும் வலுவான யு மும்பா அணியை வென்றது. அதுவும் கடைசி நேர பரபரப்பு நிறைந்த ஆட்டத்தில்.

புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இதுவரை விளையாடி 19 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி, 13ல் தோல்வி என்று மிகவும் மோசமான நிலையில், தமிழ் தலைவாஸ் அணி இருந்தது.

உள்ளூரில் நடந்த 6 போட்டிகளிலும் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மிகவும் வலுவான யு மும்பா அணியை சந்தித்தது.

இன்னிக்கு ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு

இன்னிக்கு ஜெயிச்சு அடுத்த சுற்றுக்கு

வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க. இன்னிக்கு ஜெயிச்சு, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்று தயாராக இருந்த யு மும்பா அணியை 38-35 என்ற புள்ளிக் கணக்கி்ல தமிழ் தலைவாஸ் வென்றது. இதன் மூலம் யு மும்பாவுக்கு அடுத்த சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு `வடை போச்சே'தான்.

துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய யு மும்பா

துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய யு மும்பா

துவக்கத்தில் இருந்தே, யு மும்பா சிறப்பாக விளையாடியது. முதல் பாதியில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர், பிரபஞ்சன் ஆகியோர் மறுபுறம் சிறுக சிறுக புள்ளிகளை சேர்த்து வந்தனர். இரண்டாவது பாதியில், திடீர் விஸ்வரூபம் எடுத்த கமல் போல, அதிரடியாக விளையாடியது.

ஆட்டம் முடிவடையும் நேரத்தில்

ஆட்டம் முடிவடையும் நேரத்தில்

ஆட்டம் முடிவடையும் நேரத்தில், வழக்கமான பரபரப்பு, பதற்றம் இல்லாமல், அதை யு மும்பா அணிக்கு தமிழ் தலைவாஸ் கொடுத்துவிட்டது.. தீபாவளி நெருங்கிடுச்சே, போனஸ் வரவில்லையே என்று புலம்பும் மாத சம்பளக்காரர்கள் போல, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று விளையாடியதால், யு மும்பா கடைசி நேரத்தில் வாய்ப்பை தவறவிட்டது.

பி பிரிவில் 5வது இடத்துக்கு

பி பிரிவில் 5வது இடத்துக்கு

தற்போது 20 போட்டிகளில் 40 புள்ளிகளுடன், பி பிரிவில் 5வது இடத்துக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறியுள்ளது. 13ம்தேதி பெங்கால் வாரியர்ஸ் அணியையும், 14ம் தேதி பாட்னா பைரைட்ஸ் அணியையும் தமிழ் தலைவாஸ் அடுத்து சந்திக்க உள்ளது.

Story first published: Wednesday, October 11, 2017, 13:01 [IST]
Other articles published on Oct 11, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற