சிலிர்க்க வைத்த "சின்ன வயசு செரீனா".. முதல் பட்டத்துடன் ஓய்வா??

Posted By: Staff

நியூயார்க்: முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற, யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்டீபன்ஸ், ஓய்வு பெறுவதாக கூறியுள்ளது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் பட்டத்துடனேயே ஓய்வு பெறப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பார்ப்பதற்கு, சின்ன வயசு செரீனா வில்லியம்ஸ் போல இருக்கும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், தனது, 24வது வயதில், முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

யுஎஸ் ஓபன் போட்டி பைனலில், மேடிசன் கெய்ஸை, 6-3, 6-0 என்ற கணக்கில் வென்று, கோப்பை வென்றார்.

சின்ன வயசு செரீனா போல

சின்ன வயசு செரீனா போல

உலக தரவரிசையில், 83வது இடத்தில் இருக்கும் ஸ்டீபன்ஸ், சரவரிசையில், 16வது இடத்தில் இருந்த கெய்ஸை சுலபமாக வென்றார். இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியின்போது, 957வது இடத்தில் இருந்த ஸ்டீபன்ஸ், யுஎஸ் ஓபனுக்குப் பிறகு, 17வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

இதுவே முதல் முறை

இதுவே முதல் முறை

இதுவரை, மகளிர் டென்னில் உலகச் சுற்று ஆட்டங்களில், 4 பட்டங்களை வென்றிருந்திருந்தாலும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பைனலுக்கு நுழைந்தது இதுவே முதல் முறையாகும். 2013 ஆஸ்திரேலிய ஓபனின்போது, செரீனா வில்லியம்ஸை வென்று, அரை இறுதி வரை நுழைந்தார்.

7 வருட சம்பாத்தியத்தை ஒரே பட்டத்தில்

7 வருட சம்பாத்தியத்தை ஒரே பட்டத்தில்

கடந்த, ஏழு ஆண்டுகளில், ஸ்டீபன்ஸ் சம்பாதித்தது, ரூ.28.78 கோடி ரூபாய்தான். ஆனால், யுஎஸ் ஓபன் பட்டத்துடன், ரூ.23.67 கோடியை வென்றுள்ளார்.

இதற்கு மேலும் முடியுமா

இதற்கு மேலும் முடியுமா

போட்டிக்குப் பிறகு அளித்த பேட்டியில், "இதற்கு மேல் என்னால் உயரே செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. இப்போதே நான் ஓய்வு பெற்றுவிடலாம் போலிருக்கு" என்று உணர்ச்சி பெருக்கில் கூறியுள்ளார்.

Story first published: Monday, September 11, 2017, 8:49 [IST]
Other articles published on Sep 11, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற