For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு! சீனா முதலிடம்- 8வது இடத்தில் இந்தியா!

By Mathi

இன்சியான்: தென்கொரியாவில் நடந்த 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இப்போட்டியில் 57 பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

தென்கொரியாவிலுள்ள இன்சியானில் கடந்த மாதம் 19ந் தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் 36 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகள் நிறைவு

போட்டிகள் நிறைவு

மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று மாலை நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஜகார்த்தாவில்..

ஜகார்த்தாவில்..

அடுத்த ஆசியப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் சீனா

முதலிடத்தில் சீனா

இந்த 17 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என 342 பகதக்கங்களைப் பெற்று சீனா முதலிடம் வகிக்கிறது.

2வது இடம் தென்கொரியா

2வது இடம் தென்கொரியா

79 தங்கம், 71 வெள்ளி, 84 வெண்கலம் என 234 பதக்கங்களுடன் தென்கொரியா 2வது இடத்தைப் பிடித்தது.

3வது இடத்தில் ஜப்பான்

3வது இடத்தில் ஜப்பான்

47 தங்கம், 76 வெள்ளி 77 வெண்கலம் என 200 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆசியப் போட்டியிலும் இந்த நாடுகளே முதல் 3 இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு 8வது இடம்

இந்தியாவுக்கு 8வது இடம்

ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் 8 வது இடம் பிடித்துள்ளது.

Story first published: Saturday, October 4, 2014, 17:15 [IST]
Other articles published on Oct 4, 2014
English summary
The Asian Games wrapped up on Saturday with China dominating the gold-medal count and North Korea stealing the limelight. India finished in 8th position in the Asian Games 2014 standings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X