For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக செஸ் சாம்பியன்ஷிப் 5வது முறையாக வென்றார் கார்ல்சென்

துபாய்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் இந்த ஆண்டு நடைபெற்றது.

துபாய் எக்ஸ்போவில் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நடப்பு உலக சாம்பியனான நார்வேவை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த நேப்போமோனியச்சி ஆகியோர் மோதினர்

எப்போதும் 12 சுற்றுகளுடன் நடைபெறும் இந்த தொடர் முதல் முறையாக 14 சுற்றுகளுடன் போட்டிகள் நடைபெற்றன

இந்தியான்னா சும்மா கிடையாது..!! 10 பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் கதை..இந்தியான்னா சும்மா கிடையாது..!! 10 பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் கதை..

விதிகள்

விதிகள்

ஒரு சுற்று டிராவானால் இரு வீரர்களுக்கும் அரை புள்ளிகள் வழங்கப்படும். வெற்றி பெறும் வீரர்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். எந்த வீரர் முதலில் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். இந்தப் போட்டியில் முதல் 40 நகர்த்தலை 120 நிமிடங்களில் முடிக்க வேண்டும் அடுத்த 20 நகர்த்தலை 60 நிமிடங்களில் முடிக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

முதல் 5 சுற்றுகளில் இரு வீரர்களும் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். ரஷ்ய வீரர் நேப்போமோனியச்சியின் வியூகத்தை கார்ல்செனால் உடைக்க முடியவில்லை. இந்த நிலையில் 6வது சுற்றில் இருவரும் கடுமையாக மோதினர்.சுமார் 7 மணி நேரம் 45 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 136வது நகர்த்தலுக்கு பிறகு கார்ல்சென் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே அதிக நேரம் நீடித்த போட்டி என்ற பெருமையை இது பெற்றது.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

நேப்போமோனியச்சியின் வியூகத்தை உடைத்த கார்ல்சென் அடுத்த சுற்றுகளில் உத்வேகத்துடன் மோதினார். 7வது சுற்று டிராவனாலும் அடுத்த 2 சுற்றுகளில் கார்ல்சென் வெற்றி பெற்று முன்னேறினார். இந்த நிலையில் 11வது சுற்றில் நேப்போ 23வது நகர்த்தலில் ஒரு பிழையை மேற்கொண்டார். இதனைய பயன்படுத்தி கொண்ட கார்ல்சென் 49வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த வெற்றியின் மூலம் கார்ல்சென் ஏழரை புள்ளிகளும், நேப்போ மூன்றரை புள்ளிகளும் பெற்றனர். கார்ல்செனுக்கு 1.2 மில்லியன் யூரோ பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. 2013ஆம் ஆண்டு ஆனந்துடன் விளையாடிய போது, இதே மாதிரியான ஆட்டம் தான் அமைந்தது. எனது செயல்பாடு திருப்தி அளிக்கிறது என்று சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சென் கூறினார். முட்டாள் தனமான காரியத்தை செய்துவிட்டேன். அது எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை என்று ரஷ்ய வீரர் நெப்போ கூறினார்.

Story first published: Saturday, December 11, 2021, 13:00 [IST]
Other articles published on Dec 11, 2021
English summary
Carlsen won the 5th FIDE World chess championship, Magnus won the championship which 3 games to spare. Carlson Won 1.2 Million Euro as Prize Money. Carlsen Equals Ananad Record of 5 championship.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X