For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

14 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்.. செஸ் உலகில் தமிழக சிறுவன் பரத் சுப்ரமணியம் சாதனை.. முழு விவரம்!

இத்தாலி: தமிழகத்தை சேர்ந்த சிறுவர் ஒருவர் உலகின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

இத்தாலியில் புகழ்பெற்ற 'வெர்கானி கோப்பை' சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம்.. மொத்தம் 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்..!ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம்.. மொத்தம் 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்..!

இதில் கலந்துக்கொண்ட சென்னையை சேர்ந்த 14வயது சிறுவன் பரத் சுப்ரமணியம், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தனது 3வது இலக்கை அடைந்தார்.

கிராண்ட் மாஸ்டர்

கிராண்ட் மாஸ்டர்

செஸ் விளையாட்டில் ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் 3 கட்ட கிராண்ட் மாஸ்டர் இலக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், போட்டிகளில் 2500 (Elo) புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டுமே சரியாக இருக்கும் பட்சத்தில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் வழங்கப்படும்.

 இறுதி கட்டம்

இறுதி கட்டம்

அதன்படி பரத் சுப்ரமணியம் ஏற்கனவே 2 கட்டங்களை முடித்துவிட்ட நிலையில், தற்போது இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை போட்டியில் தனது 3வது கட்டத்தை பூர்த்தி செய்தார். மேலும் 2500 (Elo) புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 73வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

இந்த போட்டியில் பரத் சுப்ரமணியம் மொத்தம் உள்ள ஒன்பது சுற்றுகளில் இருந்து 6.5 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் அந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்தார். அவருடன் சேர்ந்து மேலும் 4 வீரர்களும் 7வது இடத்தை பகிர்ந்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாம்பவானின் பாராட்டு

ஜாம்பவானின் பாராட்டு

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த், பரத் சுப்ரமணியம் மிகவும் திறமைசாலியான சிறுவன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பும் பரத் சுப்ரமணியத்துக்கு தனது பாராட்டுகளை வழங்கியுள்ளது.

இதற்கு முன்?

இதற்கு முன்?

இதற்கு முன்னர் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கொல்கத்தாவை சேர்ந்த மித்ராபா குஹா என்பவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார். செர்பியாவில் நடந்த போட்டியில் பட்டம் வென்ற நிலையில் 73வது நபராக பரத் தேர்வாகியுள்ளார்.

Story first published: Monday, January 10, 2022, 10:27 [IST]
Other articles published on Jan 10, 2022
English summary
Chennai based bharath subramaniyam becomes India's 73rd Chess Grandmaster
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X