For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ் ஒலிம்பியாட்.. முதல் தினமே களமிறங்கும் பிரக்ஞானந்தா.. இந்தியாவின் போட்டிகள் & எப்படி பார்ப்பது??

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாளான இன்று இந்தியாவுக்கான போட்டிகள் மற்றும் நிறங்கள் தெரியவந்துள்ளன.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்றைய தினம் கோலாகலமாக தொடங்கியது.

நேரு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.

காமன்வெல்த் விளையாட்டு 2022 கோலாகலமாக தொடக்கம்.. பிவி சிந்துக்கு கிடைத்த கவுரவம்..சாதிக்குமா இந்தியாகாமன்வெல்த் விளையாட்டு 2022 கோலாகலமாக தொடக்கம்.. பிவி சிந்துக்கு கிடைத்த கவுரவம்..சாதிக்குமா இந்தியா

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

இந்தியாவின் 75 நகரங்களில் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றுக்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த், அதனை தமிழக வீரர் பிரக்ஞானந்தாவிடம் வழங்கினார். இதன் பின்னர் பிரக்ஞானந்தா அந்த ஜோதியை ஏற்றி வைத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கினார். இதனையடுத்து இன்று ( ஜூலை 29 ) முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்றைய அட்டவணை

இன்றைய அட்டவணை

இன்று நடைபெறும் முதல் சுற்று போட்டி மதியம் 3 மணியளவில் தொடங்குகிறது. இந்தியா ஓபன் பிரிவில் 3 மற்றும் மகளிர் பிரிவில் 3 என மொத்தமாக 6 அணிகளை வைத்துள்ளது. இதில் இருந்து முதல் தினமான இன்று மூன்று அணிகள் களமிறக்கப்படவிருக்கின்றன.

Recommended Video

செஸ் ஒலிம்பியாட் சென்னை வந்தற்கு யார் காரணம்?
இந்தியாவின் போட்டிகள்

இந்தியாவின் போட்டிகள்

அதாவது இந்தியாவின் ஓபன் பிரிவில் இருந்து ஏ அணி, ஜிம்பாவே அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. இதன்பின்னர் மகளிர் பிரிவில் இருந்து ஏ அணி தஜிகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. இதில் மகளிர் அணிக்காக கருப்பு நிற காயை நேற்றே பிரதமர் மோடி தேர்வு செய்து தொடங்கி வைத்தார்.

பிரக்ஞானந்தா போட்டி

பிரக்ஞானந்தா போட்டி

பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிரக்ஞானந்தாவும் இன்று களம் காணுகிறார். அவர் இடம்பெற்றுள்ள இந்தியாவின் ஓபன் பி அணி இன்று ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிகளை தூர்தஷன் சேனலில் நேரலையாக காணலாம். ஆன்லைனில் Chessbase india மற்றும் FIDE ஆகிய யூட்டியூப் பக்கங்களில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 29, 2022, 9:56 [IST]
Other articles published on Jul 29, 2022
English summary
Indian team matches in chess olympiad 2022 first day ( செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ) செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் தினமான இன்று இந்தியாவின் போட்டிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X