For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் அப்பு.. செஸ் ஒலிம்பியாட் தாக்கம்.. சொந்த நாடு திரும்பியதும் தோசை சாப்பிட்டு மகிழ்ச்சி

நெதர்லாந்து: 44 வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் 185 நாடுகளை சேர்ந்த சுமார்2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் வெளிநாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு மற்றும் பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்தது.

உலகத்திலேயே ரொம்ப பிடித்த செஸ் வீரர் யார்? விஸ்வநாதன் ஆனந்த் மகன் சொன்ன பதில்..தொகுப்பாளர் ஆச்சரியம்உலகத்திலேயே ரொம்ப பிடித்த செஸ் வீரர் யார்? விஸ்வநாதன் ஆனந்த் மகன் சொன்ன பதில்..தொகுப்பாளர் ஆச்சரியம்

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வந்த அனைவருக்கும் தமிழக பண்பாட்டை விளக்கும் வகையில் நினைவு பரிசு, பரிசு பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக பல்வேறு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் வந்தனர்.

தமிழக உணவு

தமிழக உணவு

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வந்த நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே வெல்டே, இசைக் கலைஞராகவும், செஸ்சபிள் இணையத்தளத்தின் சி.இ.ஓ. வாகவும் உள்ளார். சென்னைக்கு வந்த கிரிட் வாண்டேவுக்கு இங்குள்ள சாப்பாட்டு வகைகள் மிகவும் பிடித்து போக, இது தொடர்பாக பல்வேறு பாராட்டு பதிவுகளை போட்டு இருந்தார்.

வீட்டில் தோசை

வீட்டில் தோசை

அண்மையில், கூட ஒரு நேர்காணலில் தமிழ்நாட்டின் வத்தக்குழம்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டதாக கூறினார். இந்த நிலையில், சொந்த நாடு திரும்பிய அவருக்கு, தமிழ்நாட்டு உணவு மீதான காதல் மட்டும் குறையவில்லை. இதனையடுத்து, வீட்டில் தனது தாயுடன் சேர்ந்து தோசை சுட்டு சாப்பிட்டுள்ளார்.

அம்மா சுட்ட தோசை

அம்மா சுட்ட தோசை

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்கு வந்த எனது தாய்க்கு, அங்குள்ள உணவுகள் மிகவும் பிடித்து போய்விட்டது. அங்கிருந்த உணவுகளின் புகைப் படங்களை பார்த்துவிட்டு, தற்போது அவர் எங்களுக்கு வீட்டிலேயே தோசை சுட்டு கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய இந்த ட்வீட், வைரலாகி வருகிறது

Story first published: Sunday, August 14, 2022, 13:30 [IST]
Other articles published on Aug 14, 2022
English summary
Chessable CEO Geert Van der Velde cooked home made doosa after returning from Chennai சூப்பர் அப்பு.. செஸ் ஒலிம்பியாட் தாக்கம்.. சொந்த நாடு திரும்பியதும் தோசை சாப்பிட்டு மகிழ்ச்சி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X