For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போட்டியில் தோற்ற கையோடு காதலியிடம் மண்டியிட்டு 'புரபோஸ்' செய்து 'லந்தை'க் கொடுத்த ஸ்காட்லாந்து வீரர்

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட சைக்கிள் வீரர் ஒருவர் போட்டியில் தோல்வியுற்றார். ஆனாலும் கவலைப்படாத அவர் அடுத்து செய்த காரியம்தான் அனைவரையும் கவர்ந்தது. அதாவது போட்டியில் தோல்வியுற்ற கையோடு பார்வையாளர் பகுதிக்கு ஓடிய அவர் அங்கு அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்த தனது நீண்ட நாள் தோழியிடம், மண்டியிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்க, அவரும் வெட்கச் சிரிப்பு சிரித்தபடி சரி என்று கூற உற்சாகத்தில் குஷியுடன் குதித்த அவரைப் பார்த்து அரங்கமே சிரித்து மகிழ்ந்தது.

போட்டியில் தோற்றாலும் கல்யாணத்திற்குச் சம்மதம் பெற்ற சந்தோஷம் அந்த வீரரின் முகத்தில் சைக்கிளை விட படு வேகமாக ஓடியதைக் கண்டு அத்தனை பேரும் கலகலப்பாகி விட்டனர்.

இந்த வீரரின் பெயர் கிறிஸ் பிரிட்ச்சார்ட். 31 வயதாகும் இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். இவரைக் கல்யாணம் கட்டிக்க சம்மதம் சொன்ன பெண்ணின் பெயர் அமன்டா பால்.

9வது இடம்

9வது இடம்

சைக்கிள் போட்டியில் கிறிஸ் 9வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனாலும் அவர் கவலைப்படவில்லை. தனது காதலைச் சொல்லி கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்க இதுதான் சரியான சமயம் என்று அவர் பாய்ந்து வந்த விதம்தான் ஸ்டேடியத்தையே கலகலப்பில் ஆழ்த்தியது.

கைக்குழந்தையுடன்....

கைக்குழந்தையுடன்....

போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அமன்டாவுக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. குழந்தையுடன் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த அமன்டா தடாலடியாக தன்னை நோக்கி கிறிஸ் ஓடி வந்ததைப் பார்த்து குழப்பமான புன்னகையுடன் பார்த்தார்.

கட்டிக்கோயேன்

கட்டிக்கோயேன்

நேராக அமன்டாவிடம் ஓடி வந்த கிறிஸ், அவருக்கு முன்பு முழங்காலிட்டபடி என்னைத் திருமணம் செய்து கொள்ள உனக்குச் சம்மதமா என்று கேட்க அந்த அம்மாவுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்றது.. அத்தனை உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு அவர் எஸ் என்று சொன்னபோது அரங்கமே சிரிப்பலையிலும், கரவொலியிலும் அதிர்ந்தது.

எஸ்.. எஸ்..எஸ்.!

எஸ்.. எஸ்..எஸ்.!

இதைக் கேட்டதும் உற்சாகமான கிறிஸ் இரு கைகளையும் மேலே தூக்கி புன்னகைத்தார். மேலும் உற்சாகமாக காற்றில் குத்து விட்டார்.

உடனே மோதிரத்தை மாட்டு

உடனே மோதிரத்தை மாட்டு

அத்தோடு நில்லாத அவர் கையோடு கொண்டு வந்திருந்த வைர மோதிரத்தையும் தனது காதலி விரலில் மாட்டி விட்டார். இந்தக் கூத்தை அவரது இடுப்பில் அமர்ந்திருந்த குட்டிப் பாப்பா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.

ரகசியத் திட்டமாம்

ரகசியத் திட்டமாம்

தனது இந்த புரபோசல் திட்டத்தை ரகசியமாக வைத்திருந்தாராம் கிறிஸ். நண்பர்களிடம் கூட சொல்லவில்லையாம்.

Story first published: Monday, July 28, 2014, 15:10 [IST]
Other articles published on Jul 28, 2014
English summary
This is the moment a professional cyclist proposed to his long-term girlfriend just minutes after finishing a track race at the Commonwealth Games – and punched the air in delight when she said yes. Scotland’s Chris Pritchard, 31, was still dressed in his lycra cycling gear when he got down on one knee to pop the question to Amanda Ball in front of a cheering crowd, which included the Earl and Countess of Wessex. Having just finished ninth overall in the men’s keirin at the Sir Chris Hoy Velodrome in Glasgow, Pritchard shocked the mother of his child when he clambered up into the stands and asked her to marry him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X