For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்குவாஷுக்கு வந்த கெட்ட நேரம்.. ஆசிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க கோச் இல்லை!

By Aravinthan R

சென்னை: ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ஸ்குவாஷ் அமைப்பில் பயிற்சியாளர் இல்லாமலேயே நாங்கள் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது ஸ்குவாஷ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன் இந்த தேவையற்ற சர்ச்சை உருவாகியுள்ளது.

dipika pallikal and squash federation hits back each other over coach controversy


சமீபத்தில் தீபிகா அளித்த பேட்டிகளில் இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த அச்ரப் கரார்கி (Achraf Karargui) சிறப்பாக பணியாற்றியதாகவும், ஸ்குவாஷ் வீரர்கள் அவரால் பல நன்மைகள் அடைந்ததாகவும் கூறி இருந்தார். அச்ரப் கரார்கி விலகிச் செல்லும் போது இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு முறையற்ற அணுகுமுறை கொண்டு இயங்குவதாக குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேசிய பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா மற்றும் முன்னாள் வீராங்கனை புவனேஸ்வரி குமாரி ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சைரஸ் போஞ்சா நிர்வாக வேலைகளைத் தான் நீண்ட காலமாக கவனித்து வருகிறார். எந்த வீரரும் இவர்களிடம் பயிற்சி பெறவில்லை, வீரர்கள் பயிற்சியாளரை நியமித்தோ அல்லது தாங்களாகவோ பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என கூறி இருந்தார்.

இதை அடுத்து இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்குவாஷ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாட்டு பயிற்சியாளர்

இல்லாமல் இந்திய வீரர்கள் தடுமாறி வருகிறார்கள் என்பதை முற்றிலும் மறுப்பதாக கூறி உள்ளது. மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், இதற்காக தயாராகி வரும் அனைவரின் மனநிலையை கலைக்கும் வகையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்குவாஷ் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபிகா தன் தனிப்பட்ட விருப்பங்களுக்கு கூட்டமைப்பு செவி சாய்க்காததாலும், அவர் முன்மொழிந்த பயிற்சியாளருக்கு அரசு வெகுமதிகளைப் பெற்றுத் தராதது போன்ற காரணங்களாலும் இப்படி நடந்து கொள்வதாக கூறி இருக்கிறார்.
Story first published: Friday, August 17, 2018, 8:08 [IST]
Other articles published on Aug 17, 2018
English summary
Dipika Pallikal and Squash Federation hits back each other over coach controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X