For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்.. வாவ் டுமீல்.. தங்கம் வென்றார் இளவேனில்!

By Aravinthan R

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த இளவேனில். இது இந்த ஆண்டில் இவர் பெறும் இரண்டாவது தங்கப்பதக்கம் ஆகும்.

ஜெர்மனியின் சுஹ்ல் (SUHL) நகரில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதலுக்கான ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தான் இளவேனில் தங்கம் வென்றுள்ளார். பல பிரிவுகளில் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை பெற்றுள்ளது.

elavenil bags gold at junior shooting world cup


தன்னுடன் போட்டியிட்ட சீனாவின் சேரு வாங்-ஐ (ZERU WANG) விட 0.8 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தை பிடித்தார். சமீபத்தில் முடிந்த சீனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற சைனிஸ் தைபெய் நாட்டை சேர்ந்த இங் சின் லின் (YING-SHIN LIN), மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

இளவேனில் தனிப் பிரிவில் தங்கம் வென்றதோடு, அணிகளுக்கான போட்டியில், பிற வீரர்களுடன் இணைந்து இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார். அணிகளுக்கான பிரிவில் சீனா முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

இளவேனில், தமிழகத்தில் பிறந்து, தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். இராணுவத்தில் வேலை செய்யும் தன் சகோதரரோடு போட்டி போட்டுக் கொண்டு தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறியிருக்கிறார். இதற்கு முன், மார்ச் மாதம் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பையில் மற்றொரு ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். அதில், உலக சாதனையாக 631.4 புள்ளிகள் எடுத்து அசத்தினார். இந்த உலக சாதனையை தற்போது நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் முறியடித்து 632.2 புள்ளிகள் எடுத்திருந்தார்.

இந்த ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய இது வரை, ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. இதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்திய வீரர்கள் மேலும் சில பதக்கங்களை வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Tuesday, June 26, 2018, 16:44 [IST]
Other articles published on Jun 26, 2018
English summary
Elavenil had won her second Gold of the year in the 10m air rifle competition. India at top in the event with 5 gold medals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X