ஐஸ் நடனம் செய்யும் போதே பெண்ணின் மேலாடை அவிழ்ந்தது.. ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஹீரோயிசம்!

Posted By:
ஐஸ் நடனம் செய்யும் போதே பெண்ணின் மேலாடை அவிழ்ந்தது..

பியாங்யாங்: ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் நடனம் செய்யும் போதே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ரியல்ல பாப்பாடாக்கிஸ் என்ற வீராங்கனையின் மேலாடை அவிழ்ந்து இருக்கிறது. இதை அவர் மிகவும் திறமையாக சமாளித்துள்ளார்.

இதுதான் ஹீரோயிசம் என்று எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். அதே போட்டியில் அவர் மிகவும் திறமையாக விளையாடியும் இருக்கிறார்.

இவரது இணை ஆட்டக்காரர் 'குயிலாம் சீரான்' அந்த மோசமான நேரத்திலும் பதட்டத்தை வெளிக்காட்டாமல் விளையாடி இருக்கிறார்கள். இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நடனம்

தென்கொரியாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று ஐஸில் விளையாடும் ஐஸ் நடனம் போட்டி நடைபெற்றது. இதில் ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாட்டு வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

மேலாடை

இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ரியல்ல பாப்பாடாக்கிஸ்விளையாடிக் கொண்டு இருக்கும் மேலாடை அவிழ்ந்து இருக்கிறது. ஆனாலும் இவர் போட்டியை நிறுத்தவில்லை. ஒரு கையால் மேலாடையை பிடித்துக் கொண்டே இவர் விளையாடினார்.

முழுதாக

இந்த விளையாட்டை சாதாரணமாக விளையாடுவதே கஷ்டம் ஆகும். ஆனாலும் அவர் திறமையாக ஒரு கையை வைத்து ஆடையை பிடித்துக் கொண்டே விளையாடினார். போட்டியில் இருந்து விலகாமல் இந்த ஜோடி முழு சுற்றையும் முடித்தார்கள்.

சாதனை

இந்த நிலையில் இந்த போட்டியில் இவர்கள் மிக அதிக புள்ளிகள் பெற்றார்கள். மேலும் இரண்டாம் இடம் பிடித்தனர். இவரது செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Tuesday, February 20, 2018, 13:56 [IST]
Other articles published on Feb 20, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற