தடகள வீராங்கனையை காணவில்லை

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கான இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ள வட்டு எறியும் வீராங்கனை சீமா புனியா எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ல் கோஸ்டில் ஏப்ரல் 4ல் துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக, 24 தடகள வீரர்கள், இரண்டு பிரிவுகளாக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

Indian athlete Seema Punia missing

ஓட்டப் பந்தய வீரரர்கள் எல். சூர்யா, ஜின்சன் ஜான்சன் ஊட்டியில் பயிற்சி எடுத்து வருகின்றனர். குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தூர் உள்பட நான்கு பேர் பட்டியாலாவில் நடக்கும் தேசிய முகாமில் பயிற்சி எடுக்கின்றனர். மற்ற அனைவரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

ஆனால், வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா எங்கிருக்கிறார் என்பது இந்திய தடகள கூட்டமைப்பில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவும் செல்லவில்லை, பட்டியாலாவில் நடக்கும் முகாமிலும் அவர் பங்கேற்கவில்லை.

2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன், ரஷியாவில் சீமா பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்த முறையும் அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று கூட்டமைப்பு கருதுகிறது.

2014 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சீமா, ரியோ ஒலிம்பிக்கில் 20வது இடத்தையே பிடித்தார். 2000 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் சீமா தங்கம் வென்றார். ஆனால், போதைப் பொருள் சோதனையில் சிக்கியதால், பதக்கத்தை இழந்தார். 2006 தோஹா ஆசிய விளையாட்டு போட்டியின்போதும் போதைப் பொருள் சோதனையில் சிக்கினார்.

வீரர்களுக்கு போதைப் பொருள்களை கொடுத்துள்ளதாக சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீமா அங்கு சென்றிருப்பதாகக் கூறப்படுவது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் சீமா இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

English summary
Indian athlete Seema Punia missing
Story first published: Wednesday, March 21, 2018, 12:46 [IST]
Other articles published on Mar 21, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற