கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது..! பட்டியலில் யார்? யார்? முழு விவரம் இதோ..!

Ravindra Jadeja - ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ முன் மொழிந்திருந்தது.

அதில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் பாரா தடகள வீராங்கணை தீபா மாலிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது பாட்மின்டன் விமல் குமார், டேபிள் டென்னிஸ் சந்தீப் குப்தா, தடகளம் மொஹிந்தர் சிங் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாக்கி மெஸ்பான் படேல், கபடி ரம்பீர் சிங், கிரிக்கெட் சஞ்சய் பரத்வாஜ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள 19 வீரர், வீராங்கனைகள்:

1. தஜிந்தேர் சிங்- தடகளம்

2. முகமது அனாஸ் - தடகளம்

3. பாஸ்கரன் - பாடிபில்டிங்

4. சோனியா லாதர்- குத்துச்சண்டை

5. ரவீந்திர ஜடேஜா- கிரிக்கெட்

6. சிங்லென்சனா சிங் - ஹாக்கி

7. அஜய் தாக்கூர்- கபடி

8. கவுரவ் சிங் - மோட்டார் விளையாட்டு

9. ப்ரமோத் பகத்- பேட்மின்டன் (பாரா விளையாட்டு)

10. அஞ்சும் மோட்கில் - துப்பாக்கிச்சுடுதல்

11. ஹர்மீத் ரஜுல் தேசாய் - டேபிள் டென்னிஸ்

12. பூஜா தண்டா - மல்யுத்தம்

13. ஃபவுத் மிர்சா - குதிரைச்சவாரி

14. குர்பீத் சிங் - கால்பந்து

15. பூனம் யாதவ் - கிரிக்கெட்

16. ஸ்வப்னா பர்மன் - தடகளம்

17. சுந்தர் சிங் - தடகளம் (பாரா விளையாட்டு)

18. பாமிதிபடி சாய் ப்ரனித் - பேட்மின்டன்

19. சிம்ரன் சிங் - போலோ

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian cricket player ravindra jadeja selected for arjuna award, officially announced.
Story first published: Tuesday, August 20, 2019, 18:30 [IST]
Other articles published on Aug 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X