For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நேரமாக அழுத இந்திய மகளிர் அணி.. திடீரென கால் செய்த பிரதமர் மோடி.. புத்துணர்ச்சி தந்த பேச்சு

ஜப்பான்: ஒலிம்பிக் தோல்விக்கு பிறகு மனம் உடைந்து அழுதுகொண்டிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு பிரதமர் மோடி திடீரென தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் கடந்த 3 நாட்களாக இந்தியாவுக்கு பதக்க எண்ணிக்கை அதிகரித்து வந்த சூழலில் இன்று தொடர் சறுக்கல்களாக இருந்து வருகிறது.

இன்று காலை மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. எனினும் அவர்களின் முயற்சிக்கு பெரும் அளவில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஒலிம்பிக் 2020.. 5 பதக்கங்களை வென்றும் பதக்க பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. என்ன காரணம்? ஒலிம்பிக் 2020.. 5 பதக்கங்களை வென்றும் பதக்க பட்டியலில் பின்தங்கிய இந்தியா.. என்ன காரணம்?

வெண்கலப்போட்டி

வெண்கலப்போட்டி

இந்த போட்டியில் முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன. இந்திய பெண்கள் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் முயற்சிகளை தடுத்தார். இதனால் முதல் 15 நிமிடத்திற்கு கோல் ஏதும் வராமல் இருந்தது. பின்னர் 2வது கால்பகுதி ஆட்டத்தில் இருந்து ஆட்டம் சூடு பிடித்தது.

தகர்ந்த கனவு

தகர்ந்த கனவு

ஜெர்மனி - இந்தியா என இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி கோல் மழை பொழிந்தன. எனினும் அதில் ஜெர்மனியின் கையே ஓங்கி இருந்தது. கடைசி சில நிமிடங்களில் கோல் கணக்கு 5 - 4 என ஜெர்மனி முன்னிலை வகித்தது. ஆனால் கடைசி வரை இந்திய அணியால் 5வது கோல் போட முடியாததால் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்ற முடியாமல் போனது.

புகைப்படம்

புகைப்படம்

தேசத்திற்காக இவ்வளவு போராடியும் பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை என, இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே கீழே அமர்ந்து கதறி அழுதனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரிட்டன் போட்ட கோல்களை தடுத்து இந்திய அணியின் சுவர் போன்று இருந்த கீப்பர் சவிதா, மனம் உடைந்து அழத்தொடங்கினார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் போன் கால்

பிரதமர் போன் கால்

வீராங்கனைகளின் அழுகைகள் ட்ரஸிங் ரூமிலும் தொடர்ந்தது. போட்டி முடிந்த பிறகு பிரதமர் மோடி இந்திய மகளிர் அணிக்கு தொலைப்பேசி மூலம் பேசினார். அப்போது பேசிய அவர், நீங்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினீர்கள். ஒலிம்பிக் தொடருக்காக கடந்த 5 வருடமாக கடும் வியர்வைகளை நீங்கள் சிந்தியுள்ளீர்கள். உங்களது கடின உழைப்புக்கும், வியர்வைக்கும் பதக்கம் கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இளம் பெண்களுக்கு உங்களின் முயற்சி தூண்டுகோளாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக்கூறினார்.

ஸ்பெஷல் பாராட்டு

ஸ்பெஷல் பாராட்டு

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வந்தனா கட்டாரியா மற்றும் சலிமா ஆகியோரை பிரதமர் மோடி ஸ்பெஷலாக பாராட்டினார். வந்தனா கட்டாரியாவின் சொந்த கிராமத்தில் அவரின் குடும்பத்தினர் நேற்று சாதி வன்மத்தால் இரு இளைஞர்கள் கடுமையாக அவமதித்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவரை பாராட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆறுதல் தெரிவித்த பிரதமர்

ஆறுதல் தெரிவித்த பிரதமர்

பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்த போது மகளிர் அணியினர் மௌனமாகவே இருந்தனர். எதுவும் பேச முடியாமல் அழுதுக்கொண்டே இருந்தனர். இதனை கேட்ட பிரதமர் மோடி, தயவு செய்து யாரும் அழாதீர்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களை எண்ணி பெருமைக் கொள்கிறது. பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய ஹாக்கி அணி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இது அனைத்தும் உங்களுடைய கடின உழைப்பினால் தான் எனத்தெரிவித்தார்.

பாராட்டு

பின்னர் பயிற்சியாளர் மாரிஜினிடம் பேசிய பிரதமர் மோடி, நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்துள்ளீர்கள். வீராங்கனைகளை எவ்வளவு உற்சாகப்படுத்தினீர்கள் என்பதை நான் பார்த்தேன். உங்களுக்கு நன்றி. உங்கள் அனைவரின் எதிர்காலத்திற்கும் வாழ்த்துகள் என கூறினார்.

Story first published: Friday, August 6, 2021, 22:10 [IST]
Other articles published on Aug 6, 2021
English summary
Indian women’s hockey team breaks down and Cried while talking to PM Modi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X