For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லியாண்டர் பயஸ் பின்வாங்கியது மிகப்பெரிய பின்னடைவு...சொல்கிறார் கேப்டன் ஸீஷன் அலி

By Aravinthan R

பாலெம்பங் : ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான டென்னிஸ் அணியில் இருந்து லியாண்டர் பயஸ் கடைசி நிமிடத்தில் விலகுவதாக அறிவித்தார். இதனால், ஆசியப் போட்டிகளில் பங்கேற்க உள்ள டென்னிஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறி இருக்கிறார், இந்திய டென்னிஸ் அணியின் கேப்டன் ஸீஷன் அலி.

லியாண்டர் பயஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் 8 ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்கங்கள் வென்ற அனுபவ வீரர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டென்னிஸ் அணியில் இரட்டையர் பிரிவில் ஆட இருந்த லியாண்டர் பயஸ், சரியான ஜோடி அமையாததால் கடைசி நேரத்தில் பின்வாங்கி உள்ளார்.

Leander Paes withdrawal is a big blow says captain Zeeshan Ali


லியாண்டர் பயசுக்கு ஜோடியாக சுமித் நாகல் என்ற ஒற்றையர் பிரிவில் ஆடி வரும் வீரரை ஏற்பாடு செய்து இருந்தது. அவர் தரவரிசையில் 300வது இடத்தில் இருப்பதோடு, கடைசியாக ஆடிய பல தொடர்களில் முதல் சுற்றோடு வெளியேறினார். சுத்தமாக பார்மில் இல்லை என கூறப்படுகிறது.

“நான் பலமுறை, பல வாரங்கள் முன்பு இருந்தே கேட்டு வருகிறேன். எனினும், ஒரு நல்ல இரட்டையர் பிரிவு நிபுணத்துவம் வாய்ந்த வீரரை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பது சோகமான விஷயம். எனினும், நான் வராமல் போவதன் மூலம் மற்றவர்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அதிகம் கலந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.” என பயஸ் தன் அறிக்கையில் கூறி இருக்கிறார்.

இது பற்றி பேசிய ஸீஷன் அலி, “லியாண்டர் அணியில் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றம். அது அவருடைய முடிவு. எனினும், அவரது நாட்டுப்பற்றை கேள்வி கேட்க முடியாது. பயஸ் யாருடன் ஆடுவதாக இருந்தாலும் நாட்டின் பிரதிநிதியாக பங்கேற்று இருக்க வேண்டும்” என தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.



Story first published: Monday, August 27, 2018, 12:53 [IST]
Other articles published on Aug 27, 2018
English summary
Leander Paes withdrawal is a big blow says captain Zeeshan Ali
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X