For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்... 100 மீ. ஓட்டத்தில் தங்கம்... உசைன் போல்ட் “ஹாட்ரிக்” வெற்றி!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியின் 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. எப்போதுமே ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.

ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

உசைன் போல்ட்...

உசைன் போல்ட்...

கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆடவர் 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றார் உலகின் மின்னல் வேக மனிதராகக் கொண்டாடப்படும் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட். மேற்கண்ட 3 போட்டிகளிலும் உலக சாதனையும் போல்ட் வசமே உள்ளது.

தங்கம்...

தங்கம்...

இந்நிலையில், இன்று நடைபெற்ற 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். 9.81 விநாடிகளில் அவர் இலக்கை எட்டினார். அவருக்கு அடுத்த இடத்தில் வந்து அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் வெள்ளிப் பதக்கத்தையும், கனடாவின் ஆண்ட்ரே கிரேஸ் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

ஹாட்ரிக் சாதனை...

ஹாட்ரிக் சாதனை...

இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டியில், 100 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார் உசைன் போல்ட்.

7 தங்கப் பதக்கங்கள்...

7 தங்கப் பதக்கங்கள்...

ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 7 தங்கப் பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 15, 2016, 10:09 [IST]
Other articles published on Aug 15, 2016
English summary
The 29-year-old Jamaican legend, competing in his final Olympics, powered over the line in 9.81sec, vanquishing drug-tainted American rival Justin Gatlin who took silver with Andre De Grasse of Canada claiming bronze.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X