For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“கட்டுக் கதைகளை நம்ப வேண்டாம்”... சானியாவுடனான பிரிவு குறித்து மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்

டெல்லி: நான் சானியா மிர்ஸாவை விட்டுப் பிரிந்ததற்கு சமீப காலத்தில் நாங்கள் விளையாடிய போட்டிகளின் முடிவுகள்தான் காரணம். மற்றபடி சில மீடியாக்களில் வரும் கட்டுக் கதைகளை யாரும் நம்ப வேண்டாம். நாங்கள் பிரிந்தாலும் கூட எங்களது தனிப்பட்ட நட்பு தொடரும் என்று டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் மகளிர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனைகளாக வலம் வந்தவர்கள் சானியாவும், மார்ட்டினாவும். இருவரும் கடந்த 2015ம் ஆண்டு முதல் இணைந்து ஆடி வந்தனர்.

2015ம் ஆண்டு மார்ச் முதல் இருவரும் விளையாடி பல பட்டங்களைக் குவித்தனர். உலகின் அசைக்க முடியாத நம்பர் ஒன் வீராங்கனைகளாக வலம் வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர்களின் 16 மாத கால டென்னிஸ் உறவு முறிந்துள்ளது.

சான்டினா...

சான்டினா...

இருவரும் இணைந்து 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்பட 14 பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் செல்லமாக "சான்டினா" என்ற பெயரும் வந்து சேர்ந்தது. இருவரும் பல சாதனைகளைப் படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

உடைந்தது உறவு...

உடைந்தது உறவு...

ஆனால் திடீரென இந்த உறவு முறிவதாக சமீபத்தில் சானியா மிர்ஸா தெரிவித்திருந்தார். தற்போது இதற்கான காரணத்தை விளக்கி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார் மார்ட்டினா ஹிங்கிஸ்.

இதுதான் காரணம்...

இதுதான் காரணம்...

இது குறித்து மார்ட்டினா கூறுகையில் "நாங்கள் பிரிவது என்பது இருவரும் ஒருமித்த எடுத்த முடிவாகும். வேறு பார்ட்னருடன் தொடர்ந்து விளையாடலாம் என்று முடிவு செய்தே பிரிந்துள்ளோம். எங்களுக்கு சில போட்டிகள் குறித்து நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அது நிறைவேறவில்லை. இதுவே பிரிவதற்குக் காரணம்.

தொழில்முறை பிரிவே...

தொழில்முறை பிரிவே...

கடந்த காலத்தில் நாங்கள் மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றிருந்தோம். ஆனால் எதிர்பார்த்த சில போட்டிகளில் அதை எட்ட முடியவில்லை. இது முழுக்க முழுக்க தொழில் முறையிலான பிரிவாகும்.

நட்பு தொடரும்..

நட்பு தொடரும்..

தனிப்பட்ட முறையில் நாங்கள் தொடர்ந்து நட்பு செலுத்துவோம். இருவரும் தத்தமது போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துவோம். மற்றபடி இந்த பிரிவு குறித்து சில மீடியாக்களில் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை விளக்கவே இந்த விளக்கம்" என்று கூறியுள்ளார் மார்ட்டினா ஹிங்கிஸ்.

14 பட்டங்கள்...

14 பட்டங்கள்...

2015ம் ஆண்டு முதல் இணைந்து விளையாடி வந்த சானியாவும், மார்ட்டினாவும் இணைந்து மொத்தமாக 14 இரட்டையர் பட்டங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து. இதில் விம்பிள்டன் இரட்டையர் உள்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

தோல்வி...

தோல்வி...

இருவரும் கடைசியாக கடந்த மாதம் கனடாவில் நடந்த மான்ட்ரீல் ஓபன் டென்னிஸ் போட்டியில்தான் கடைசியாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காலிறுதிப் போட்டியில் இந்த ஜோடி தோல்வியுற்றது.

Story first published: Thursday, August 11, 2016, 16:06 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
Sania Mirza and Martina Hingis, who began their partnership in March 2015, have ended their 16-month partnership due to a string of recent poor results.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X