அந்தரத்தில் சுழன்று வித்தை.. ஃபிரி ஸ்கெட்டிங்கில் புதிய சாதனை.. கெத்து காட்டிய அமெரிக்க வீராங்கனை!

Posted By:
அந்தரத்தில் சுழன்று வித்தை செய்த அமெரிக்க வீராங்கனை!-வீடியோ

பியாங்யாங்: தென்கொரியாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று ஐஸில் விளையாடும் ஃபிரி ஸ்கெட்டிங் போட்டி நடைபெற்றது.

இதில் ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாட்டு வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதேபோல் அமெரிக்க வீராங்கனைகளும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

முக்கியமாக அமெரிக்க வீராங்கனை மிராய் நகாசு இதில் புதிய சாதனை ஒன்று படைத்து இருக்கிறார்.

என்ன

இவர் இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடினார். இவர் டிரிபிள் ஆக்ஸல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். இந்த சாதனையை படைக்கும் முதல் அமெரிக்க பெண் இவர்தான். உலக அளவில் மூன்றாவது பெண் ஆவார்.

டிரிபிள் ஆக்ஸல்

டிரிபிள் ஆக்ஸல் என்பது இந்த போட்டியில் செய்யப்படும் வித்தியாசமான சாதனை ஆகும். ஸ்கெட் செய்து கொண்டே இருக்கும் போது மேலே எழும்பி மூன்று முறை சுற்றுவார்கள். வேகமாக சுற்றிவிட்டு மீண்டும் சரியாக தரை இறங்க வேண்டும்.

செம

இது பார்க்க ஜிம்னாஸ்டிக் போலவே இருக்கும். அதன் காரணமாகவே இதற்கு டிரிபிள் ஆக்ஸல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களின் உடல் வாகிற்கு இதை செய்ய முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. அதை இவர் முறியடித்துள்ளார்.

வெறும் 22 நொடி

இவர் களத்திற்கு வந்து வெறும் 22 நொடியில் இந்த சாதனையை செய்து இருக்கிறார். மிக குறைந்த நொடியில் இந்த சாதனையை செய்த ஒரே பெண் இவர்தான். இவர் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 12, 2018, 17:05 [IST]
Other articles published on Feb 12, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற