For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்காட்லாந்தை போராடி வென்று 'உலக சாதனை' படைத்த நியூசிலாந்து!

By Veera Kumar

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து 142 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 24.5 ஓவர்களில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து போராடி வென்றது.

உலக கோப்பையின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் டுனெடின் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பலப்பரிட்சை நடத்தின.

டாஸ் வென்ற நியூசிலாந்து

டாஸ் வென்ற நியூசிலாந்து

டாசில் வென்ற நியூசிலாந்து, ஸ்காட்லாந்தை பேட் செய்ய அழைத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர் கைல் கோட்சர் 1 ரன்னிலும், கலம் மேக்லியோட் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒன்டவுன் பேட்ஸ்மேன் ஹேமிஸ் கார்டினரும், 5வதாக களமிறங்கிய கேப்டன் பிரிஸ்டோன் மோம்சென் ஆகியோரும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்கள்.

ஸ்காட்லாந்து தடுமாற்றம்

ஸ்காட்லாந்து தடுமாற்றம்

எனவே அந்த அணி 4.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில்தான் மோட் மச்சான் மற்றும் ரிச்சே பெர்ரிங்டன் ஆகியோர் முறையே 56 மற்றும் 50 ரன்கள் விளாசி அணி கவுரவமான ஸ்கோர் எட்ட உதவினர்.

142 ரன்களுக்கு ஆல்-அவுட்

142 ரன்களுக்கு ஆல்-அவுட்

இருப்பினும் அதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் முன்வரிசைகாரர்களை போல நடையை கட்ட, ஸ்காட்லாந்து அணி, 36.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனியல் வெட்டோரி மற்றும் கோரி ஆன்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

நியூசிலாந்தும் தடுமாற்றம்

நியூசிலாந்தும் தடுமாற்றம்

2வதாக பேட்டிங் செய்த நியூசிலாந்தும் ஸ்காட்லாந்து பந்து வீச்சில் தடுமாற்றத்தையே சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் குப்தில் 17 ரன்களிலும், கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 15 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றினர். கேன் வில்லியம்சன் 38 ரன்களிலும், ரோஸ் டெய்லர் 9 ரன்களிலும் அவுட் ஆகினர்.

நியூசிலாந்து ரசிகர்களுக்கு திக்.. திக்..

நியூசிலாந்து ரசிகர்களுக்கு திக்.. திக்..

17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர் ஸ்காட்லாந்து பவுலர்கள். இதனால், 23.4 ஓவர்களில் அந்த அணி 137 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் டேனியல் வெட்டோரி 8 ரன்களுடனும், ஆடம் மில்னே 1 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர்.

போராடி வெற்றி

போராடி வெற்றி

24.5 வது ஓவரில் வெட்டோரி பவுண்டரி அடிக்க நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. குட்டியணியான ஸ்காட்லாந்து, பலம்வாய்ந்த நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே மிரட்டிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

வேதனையிலும் ஒரு சாதனை

வேதனையிலும் ஒரு சாதனை

151 பந்துகள் மிச்சமிருந்த நிலையிலும், 3 விக்கெட் வித்தியாசத்தில்தான் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இத்தனை பந்துகள் மிச்சமிருந்த நிலையில் வெறும் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்தான் ஒரு அணி வெற்றி பெற்றது உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். அந்த வகையில் சோதனையிலும் ஒரு சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து.

Story first published: Tuesday, February 17, 2015, 9:22 [IST]
Other articles published on Feb 17, 2015
English summary
New Zealand won by 3 wkts with 151 balls to spare: this is the narrowest win with most balls to spare in ODI cricket history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X