ஸ்டாவங்கர்: நார்வே செஸ் ஓபன் குரூப் ஓன் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த மாதம் ஆன்லைனில் நடைபெற்ற செஸ்ஸப்பல் மாஸ்டர்ஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2 வது இடத்தை பிடித்து அசத்தினார்.
தற்போது சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில, 2700 புள்ளிகளுக்கு கீழ் உள்ள வீரர்களுக்காக நார்வே செஸ் ஓபன் குரூப் ஏ தொடர் நடைபெற்றது.
இந்த தொடரில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி அசத்தி வந்தார். 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரில் பிரக்ஞானந்தா விக்டர், விட்டாலி குனின், முகமது, சீமென்,மதியாஸ், பிரனித் என 6 சுற்றில் வெற்றி பெற்றார். மூன்று சுற்றில் டிராவை தழுவினார்.
கடைசி ரவுண்டில் சக நாட்டு வீரரான பிரனித்தை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் முதலில் 7.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தாம் திட்டமிட்டப்படி இந்த தொடரில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
இதே போன்று முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட நார்வே செஸ் ஓபன் பிரிவில் உலக சாம்பியன் கார்ல்சென் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த தொடரில் அவர் 16.5 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தார். முன்னாள் சாம்பியனான தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.
இவ்வளவு பிரமாண்டமா?? செஸ் ஒலிம்பியாட்-கான சின்னத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.. சூடுபிடித்த பணிகள்