For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் மோசமாகும் நிலை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நிர்வாகிகள்.. கொரோனா பாதிப்பு!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 நிர்வாகிகள் கொரோனா காரணமாக உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு இடையில் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் நடந்து வருகிறது. ரசிகர்கள் கூட்டம் இன்று ஒலிம்பிக் மிகவும் பாதுகாப்போடு நடந்து வருகிறது. ஆனாலும் கூட ஒலிம்பிக் கிராமத்தில் வரிசையாக பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Olympics: 2 More game related persons affected with Coronavirus and admitted in hospital

கொரோனா பாதித்தவர்கள் உடனே கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் அவர்களோடு தொடர்பில் இருந்த மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதனால் பல்வேறு வீரர்கள் ஒலிம்பிக்கில் ஆட முடியாத நிலை கூட ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் நேற்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அமெரிக்க பளு தூக்குதல் வீரர் கெண்ட்ரிக்ஸ் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இப்படி முக்கியமான வீரர்களும் ஒலிம்பிக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அட்டானு தாஸ்.. 6-4 புள்ளி கணக்கில் வெற்றி! ஒலிம்பிக் வில்வித்தை போட்டி.. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அட்டானு தாஸ்.. 6-4 புள்ளி கணக்கில் வெற்றி!

இந்த நிலையில் தற்போது இரண்டு பேர் தீவிர கொரோனாவோடு ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு வெளிநாட்டு அணிகளோடு வந்த குழுவினர். ஆனால் இவர்களின் விவரம் வெளியிடப்படவில்லை.

இவர்களுக்கு தீவிர கொரோனா இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் கிராமத்திலும் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 29, 2021, 14:01 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Olympics: 2 More game related persons affected with Coronavirus and admitted in hospital in Tokyo.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X